புதிய கொள்கைகள், பெரிய திட்டங்கள், பெரிய கட்டமைப்புகள் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவது ஒரு வழி.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதை மக்களின் இயக்கமாக மாற்றி பெரும் அளவில் செய்வது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் வளர்ச்சியை கொண்டுவரும்… அரசில் இருக்கும் நாங்கள் எப்போதும் ஒரு கேள்வியை கேட்கிறோம், எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. அதற்கு என்ன வகையான பலன் கிடைக்கிறது? இதற்கு அரசு அலுவலகங்கள் திறமையாக செயல்படவேண்டியிருக்கிறது. இதற்கு சில சட்டங்களை மாற்ற வேண்டி இருக்கிறது… முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை எல்லாம் வேலைவாய்ப்புகள் இல்லையேல் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும். நமக்கு உற்பத்தி மட்டும் தேவையில்லை, வெகுஜன மக்கள் செய்யும் பெரும் உற்பத்தி தான் தேவை…. பல நாடுகள் வருமானத்தால் பணக்கார நாடுகளாக இருக்கிற போதிலும் சமூக அமைப்பில் ஏழைகளாக இருக்கின்றன. சமூகத்தை ஒன்றாக பிணைக்கும் அவர்களின் குடும்ப அமைப்புகள், நம்பிக்கை முறைகள், சமூக உறவுகள் ஆகியவை சிதறியுள்ளன. நாம் அந்த வழியில் போகக்கூடாது. நமக்கு சமூகமும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுதல் வேண்டும்…
Tag: அரசு இயந்திரங்கள்
குரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா
இரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். . ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள்….. எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு சபைகளும் அங்கீகரித்து ஒரு முடிவுக்கு வரும் வரை ஒரு சில பணியாளர்கள் தவிர பிறர் வேலைக்கு வர வேண்டாம் வீட்டில் இருங்கள் அல்லது பீச்சுக்குப் போங்கள். பின்னால் சொல்லி அனுப்புகிறோம் என்று கட்டாய சம்பளமில்லாத விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நமது தமிழ் பத்திரிகைகளின் அமெரிக்க நாட்டு வல்லுனர்கள் எழுதுவது போல எவரும் டிஸ்மிஸ் செய்யப் படவில்லை அமெரிக்கா நிதி இல்லாமல் மஞ்சக் கடுதாசிக் கொடுத்து போண்டியாகவும் இல்லை….
View More குரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்காகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2
அணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல… இந்தியா எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு உள்ள நாடாக, பலமான ஒரு நாடாக மாறுவதை கிறிஸ்துவ அமைப்புகளும் அவற்றை இயக்கும் நாடுகளும் விரும்புவதேயில்லை… எஸ்.பி.உதயகுமார் ஆராய்ச்சியின்படி பொக்ரானில் அணு குண்டு வெடித்த பா ஜ க அரசு ஒரு நாசகார சக்தி. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே அமைதி ஆராய்ச்சியாளர் கூடங்குளத்தில் இறங்கி… இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால் ஜெயிக்கப் போவது இந்திய எதிர்ப்புச் சக்திகள் மட்டுமே, அது ஒரு மாபெரும் பொதுத் தொடர்புப் பிரச்சாரத் தோல்வியாகவும் இருக்கும்….
View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1
அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் வரை… மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அரசுகளின் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம்….சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா?…
View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்
பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்… ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா?
View More சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
திறமையான மாணவர்களை மனப்பாட அடிப்படையிலான முதற்கட்டம் நீக்கிவிடுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான CBSE பள்ளிகள் முதற்கட்டத்தைத் தாண்ட இயலவில்லை… பொதுவாக மாணவர்களைச் சலுகைகளை எதிர்நோக்கும் சவலைக் குழந்தைகளாக்கி, ஆசிரியர்களை அரசியல்வாதிகளின் கூட்டணிக் கட்சிகளாக்கும் தி.மு.க-வின் தந்திரத்தினால்…
View More தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?ஒரு தேசம், இரு உரைகள்
அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்… ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக…’
View More ஒரு தேசம், இரு உரைகள்ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி
சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்… முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது… இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது…(மூலம்: ஜான் மெக்லிதான்)
View More ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணிஎமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்
தனது கொள்கைக்கு நேர் மாறான ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் உதவி கேட்க ஜெ.பியால் முடிகிறது. தாய்நாட்டிற்கு முன்னால் வேறு எதுவும் பெரியதில்லை என ஜெ.பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வாஜ்பாய்…அடுத்த கிங்மேக்கரான மூப்பனார் முதல் இன்றைய தங்கபாலு மற்றும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன்வரை எல்லோரும் நேரு, காந்தி பரம்பரைக்கு கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்துகொண்டுள்ளனர்…
View More எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்
எப்படி ஏமாற்ற முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார்…இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன… எழுந்துவர வாய்ப்பில்லை என்று எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்…
View More மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்