இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர். சுவாமிகள் அடிப்படையில் ஒர் ஆசிரியர். அவரது மையமான பணி என்பது நமது ஞான நூல்களை ஆழமாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிப்பது என்பதாகவே இருந்தது… துறவியும் ஆன்மீகத் தலைவருமாக இருக்கும் ஒருவர் இந்து தர்மத்தை அவமதிக்கும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எந்தவகையில் உறுதியான எதிர்ப்பையும் எதிர்வினையையும் பதிவுசெய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதற்கான ஆதர்ச வழிகாட்டுதலாக சுவாமிகளின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.
View More அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்Tag: இந்துமத அவமதிப்பு
வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?
திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை… திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா?… திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த சனாதனி; உலகுக்கு ஞானம் அளித்த துறவி. சனாதனத்தின் இப்போதைய பெயர் ஹிந்து என்பதால், வள்ளுவர் ஓர் ஹிந்துவே. அவரைப் போற்றவும், எந்த வடிவிலும் வணங்கவும் ஹிந்துப் பெருமக்களுக்கு உரிமையும் உண்டு கடமையும் உண்டு. இதை விமர்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை…
View More வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை
துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான “விவாதங்களை” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்… அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, அதே வீச்சில் காந்தி கொலையையும் கோட்சேயையும் தாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று சந்தேகமின்றி தெளிவுபடுத்தியுள்ளன…
View More காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வைஇந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்
கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…
View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்
ஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன? அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார்…
View More திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்
காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்… ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும் பிராம்மணர்களின் போராட்டமாகக் காட்டவும் பிராம்மண – அப்பிராம்மண, சைவ – வைணவ சண்டையாகவும், மாற்றவும் முயற்சி செய்தனர். அவை பெரும் தோல்வி அடைந்தன. அந்த நிலையில், இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களைத் திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர்….
View More தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை
ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது..
View More வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினைதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?
சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்… காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.
View More தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்
சமீபத்தில், இதே இரகத்தை சேர்ந்த ஒருவரை, “ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதைப்போல் இயேசுவை சொல்லிப் பாரும். உங்களைக் கூலிப்படையாக நடத்தும் வெள்ளைக்காரன் செவுளில் ஒன்று விடுவான்” என்று சவால் விட்டேன். எதிர்பார்த்தவிதமே கௌபீனத்தில் கக்கா போய்விட்டார்… பசுவதை இன்றி பால் அருந்த வழி இருக்கிறது. ஆனால், பசுவதை இன்றி மாட்டிறைச்சி அருந்த வழி இல்லை. இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் மட்டுமில்லை. அயோக்கியத்தனமும் கூட. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டால் “போஷிக்க விவசாயியால் முடியாது. எனவே சந்தையில் அடிமாடாக விற்க வேண்டி வருகிறது” என்பதும் கள்ளவாதம். பிஷ்ணோய் மக்களால் போஷிக்க முடியுமெனில் மற்றவர்களாலும் முடியும். பேராசை கொண்டவனால் முடியாது…
View More பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்பென் (Ben) : திரைப்பார்வை
‘அற்புத சுகமளிக்கும்’ பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் பேய் பிடித்தவர்களை விரட்டுவதாகவும், தீராத நோய்களை மேடையிலேயே அதிசயமாக குணமாக்குவதாகவும் வெறித்தனமாக கத்தி, கூப்பாடு போடும் அட்டூழிய வீடியோக்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த வெறிக் கூச்சல்களை கிண்டலடித்துவிட்டு கடந்து விடுவோம். ஆனால் இவை உண்டாக்கும் கடுமையான உளவியல் பாதிப்புகளும், இவற்றின் பின்னால் உள்ள பிறமத -குறிப்பாக இந்து மத- காழ்ப்புணர்வும் எவ்வளவு தூரம் அப்பாவிகளின் சீரழிக்கும் என்பதை 2015ல் வந்த இந்த மலையாளப் படம் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி, மிக தைரியமாகக் காட்டுகிறது. கிராமத்து பள்ளியில் படித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் ஒரு சிறுவனை அவனது அம்மா நகரத்தில் ஒரு பெரிய கான்வென்ட்டில் படிக்க வைக்க விரும்பி செய்யும் சில பலவந்தமான காரியங்களும், முட்டாள் தனமான முடிவுகளும் அதன் விளைவுகளும் கதை…..
View More பென் (Ben) : திரைப்பார்வை