இந்தப் பாடலில் ஏனையோர் கூறுமாறு பிராமணர் முதலியோர் முகம் முதலிய உறுப்புகளில் தோன்றியதாகக் கூறிய சுவாமிகள், நான்காம் வருணத்தவரை, “முகம், தோள், தொடை ஆகிய உறுப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் சரணம் என்று உரைக்கும் உறுப்பினில்” தோன்றியவர்கள் எனக் கூறுகின்றார். சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள். ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார். வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர் என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார்….
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 2Tag: தமிழ்
தலபுராணம் என்னும் கருவூலம் – 1
பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்…. தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்…
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 1கோவை புத்தகக் கண்காட்சி 2010
இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது… கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம்…
View More கோவை புத்தகக் கண்காட்சி 2010செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்
தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?… பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)
View More செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்
வைகாசி மாதம் இரு பெரும் பக்தித் தமிழ் வல்லார்களின் திருநாட்கள் வருகின்ற அற்புத மாதம். ஒருவர் சைவத்திருமுறைகள் அருளிய திருஞானசம்பந்தர். மற்றையவர் சடகோபர் என்றும் தமிழ்மாறன் என்றும் பேசப்படும் நம்மாழ்வார். .. பதினாறாண்டுகள் அம்மரப்பொந்தினுள் அசையாதிருந்த அக்குழந்தை உண்ணாமலும் உறங்கமலும் ஆழ்நிலைத்தியானத்தில் ஆழ்ந்திருந்தது… “சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்…
View More வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்
இந்த மண்ணின் சிற்பிகளின், கலைஞர்களின், ஞானிகளின், உழைப்பாளிகளின், மன்னர்களின், வீரர்களின், மக்களின் ஆன்மாவைத் தம்முள் கோபுரங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறன… நாளை தமிழ்த் தாய்க்கு பர்தா போடவும், தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதில் சுவிசேஷ பஜனை பாடவும் கூட இந்த மானங்கெட்ட கூட்டம் கொடி பிடிக்கும்… திராவிடக் கட்சிகளில் நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து வரும் கடும் இந்து துவேஷமும், ஏன் இந்திய தேசியம் மீதான வெறுப்புணர்வும் கூட இன்னும் அதிகமாக, வெளிப்படையாகவே தலை தூக்கக் கூடும்.
View More தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?
தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ
கம்பனின் இராமனை வெறுப்பவர் தமிழ் வளர்ப்பவரோ
ஔவையின் முருகனை மறுப்பவர் தமிழர் தானோ …
தமிழின் கொள்கைக்கு பகைவர்
தமிழ் வளர்ப்பதேனோ – இவர்
தமிழ் விற்றே தன் குலம் செழிப்பர்
இதை உணர்வார் யாரோ …
ரத்தங்கள் சிந்தி கட்டினன் தமிழன்
சில சொற்களை சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார்
ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள்? .. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்… தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு!
View More ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்போகப் போகத் தெரியும் – 41
வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது… சித்தர் மரபில் வந்த தாயுமான சுவாமிகள் சரளமாக சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே அது தமிழர் நெறி இல்லையா என்று கேட்டதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
View More போகப் போகத் தெரியும் – 41ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்