வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?… அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள் மீது ஏற்படாத ஒரு நம்பிக்கை இந்தியாவை உடைப்பேன் என்று சொல்பவனின் மீது வந்தால் எது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?….
View More உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2Tag: தேசத் துரோகிகள்
கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்
தினசரி வன்முறை நாடகங்களை மாணவர்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போடுகிறது. அதில் ரத்தம் தோய்ந்த கைகளை வைத்துக்கொண்டும் சுடுவது போன்றும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். காந்தி இந்தியாவின் ரஸ்புடின் என்று உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். பன்னெடுங்காலமாக சாத்வீக உணவை உண்டு வரும் பிராமண மற்றும் வைஸ்ய மாணவர்களை கட்டாயமாக மாமிச உணவு உண்ண வைக்கிறார்கள். கட்டற்ற பாலுறவு என்பது தான் அவர்கள் கொள்கை. ஒரு தார மணம் பற்றி கடுமையாக தூற்றுகிறார்கள். இதை தவிர தடி கொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குகிறார்கள். வாய்ப்பிருந்தால் அவர்களையும் விடுதலை வீரர்களையும் பிரிட்டிஷ் காவல்துறையிடம் போட்டு கொடுக்கிறார்கள்…. ஜோஷியின் பதில்களை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. காந்திக்கு அன்றே தெரியும் கம்யூனிஸ்டுகள் தேச விரோதமாக மாறுவார்கள் என்ற உண்மை….
View More கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)
அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே உலை வைத்து விடுவார்கள்… கூட்டணியின் தலைவர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதராக இருக்கலாம். அவரைத்தான் இவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஜெயலலிதாவை விடவும் மோசமான உடல் மற்றும் மன நிலை உடையவராக இருக்கிறார். குணா என்னும் சினிமாவில் புத்தி ஸ்வாதீனமில்லாத மகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று மோசடி செய்ய முயலும் அவனது அம்மாவின் கும்பலைப் போன்றது இந்தக் கூட்டணி….
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்
பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. “பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபடு துருக்கர்”.. இதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது. வேறோர் இடத்தில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.. “மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்று பாரதியே சொல்கிறார். பாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது….
View More பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்
ஆதாரம் இல்லாத பொய்யான ஆபாச செய்திகளை இந்துத்துவ இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி வெளியிடுவது, போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊறியவை ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்கள். இவற்றை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் பின்னால் இருப்பது பிரமாண்டமான மத மாற்ற வியாபாரத்தின் கரங்கள்…. கர்நாடக பாஜகவினர் பார்த்த ஆபாச நடனம் என்ற பெயரில் வெளியிட்ட பொய் செய்தி, Kaமல ஹாசன் ராமனுஜர் பற்றி உதிர்த்த முத்துக்கள், அவரின் அருந்தவ புதல்வி என் தகப்பனார் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுக்கலாம் நான் கொடுக்க கூடாதா? என்று பெண்ணுரிமை பேசி கொடுத்துள்ள பேட்டி… கூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள்…. நித்தியானந்தா விவகாரம் முதல் ஆஷாராம் பாபு, காஞ்சி சங்கராச்சாரியர் உள்ளிட்ட விவகாரங்களில் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் தினமும் கற்பழித்துக் கொண்டும், அனாதை ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்களை அயல் நாட்டு ஆண்களுக்கும், பாதிரிகளுக்கும் விருந்தாக்கி கொண்டிருக்கும் கிறிஸ்தவ “தொண்டு “ என்ற பெயரில் விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் சக்திகளை வெளிக்காட்ட ஒரு முயற்சியும் இருப்பதில்லை…. இவர்களுக்கு பெருமளவு பணமும், பரிசுப் பொருட்களும், பன்னாட்டு ஹோட்டல்களில் தங்குமிடமும், வெளிநாட்டு பயணமும், ஊடகங்களில் போதுமான கவனமும் கொடுக்கப் படுகின்றன. இப்போது நீங்கள் ஞாநி, அ.முத்துகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் என்ற புனைபெயர் கொண்ட சாகுல் அமீது இவர்களை எடுத்து கொள்ளுங்கள்….
View More முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்
… இந்துக்களால் இந்துக்களைக் கொண்டு நடத்தப்படும் ஓர் அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு முஸ்லீம்கள் எந்த அளவுக்குக் கீழ்ப்படிவார்கள்?… திரு.முகம்மது அலி, “திரு.காந்தியின் குணப்பண்பு எவ்வளவுதான் தூய்மையானதாக இருந்தாலும் சமயக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, பண்பே இல்லாத எந்த ஒரு முசல்மானைவிடவும் கீழானவராகவே எனக்குத் தோன்றுகிறார்… ஆம், என்னுடைய மதத்தின்படி, என்னுடைய சித்தாந்தத்தின்படி, ஓர் ஒழுக்கங்கெட்ட, இழிவடைந்த முசல்மானை திரு.காந்தியைவிட மேம்பட்டவனாகவே கருதுகிறேன்’’என்றார்… வரலாற்றுச் சிறப்புமிக்க இதே பானிபட் சமவெளியில் இந்துக்களும் முஸ்லீம்களும் நான்காவது போர் ஒன்றைப் பரீட்சார்த்தமாக நடத்திப் பார்த்துவிடலாம் என்று மௌலானா அக்பர் ஷா கான் தெரிவித்தார்…
View More [பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்
“…முஸ்லீம்களை வெளியேற்ற விரும்புதலே உள்ளார்ந்த நாட்டுப்பற்றின் வெளிப்பாடாக இருக்க முடியும். இந்தியப் படைகளில் முஸ்லீம்களின் மேலாதிக்கத்தை அறுதியாக முடிவுக்குக் கொண்டுவர இஃதொன்றே உற்ற வழி…. இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்ஜியத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்திவிடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள்.”… எந்தக் காரணத்திற்காக முஸ்லீம்களை படையில் இருந்து குறைக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னாரோ அந்தக் காரணம் 1947-48இல் காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்தபோது சரியெனப் புலப்பட்டது…
View More [பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று
1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.
View More காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று