கேவலம் ஒரு புவிப்பரப்பை தேவியின் சொரூபமாகக் கருதுவதா என்று நினைக்கும் கடுஞ்சாக்தர்கள் சாக்தத்தின் முக்கியமான கருத்தொன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நலம்… தம்முடைய வாழ்வியல் நெறியையும், ஆன்மிகக் கொள்கை விளக்கத்தையும் நன்கு நிறுவி ஒரு நூலாக இயற்றுவதற்கு வேண்டிய கால வசதி அந்தப் பெருமகனாருக்கு இல்லாமலே போய்விட்டது… நாம் இப் பாரத மாது நிரந்தர கன்னி யென்பதாகவும், இவளுக்கும் நரை, திரை முதலியன இல்லையென்பதாகவும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்…
View More பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]Tag: பக்தி
அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை
இராமனின் முன்னால் சீதையும், பின்னால் இலக்குவனும் நடந்திடும் காட்சியிலும் பண்பினிமைச் சுட்டுண்டு… இராவணனை இராவணனாகவும் இராமனை இராமனாகவும் ஆக்கிய அற்புத உரைகல் சீதாதேவி… ஆண்டுதோறும் இராமாயண அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் நன்முயற்சி இது.
View More அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமையோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…
அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
View More யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…பாரதியின் சாக்தம் – 4
மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்… பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்… காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.
View More பாரதியின் சாக்தம் – 4அறியும் அறிவே அறிவு – 2
பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே… உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும்.
View More அறியும் அறிவே அறிவு – 2ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
இந்தப் புராணத்தில், ஆசிரியர் தக்க இடங்களில் அந்நிய மதத்தாரால் ஈழநாட்டில் இந்துமதத்திற்கு ஏற்பட்ட தொல்லைகளையும் பதிவு செய்து வைத்துள்ளார்… தாமன் என்பது ‘தாமசு’ என்பதன் மரூஉ. கனகசபாபதி குருக்கள், மறைவாக, ‘தாமன்’ என்ற அந்தப் பெயரையே ‘தாமோதரன்’ என மாற்றியமைத்து, தமது சைவசமய ஆசாரப்படி… அருணாசலம் மதமாற்றத்திற்குச் சிறிதும் மனங்கொள்ளாது, முந்தினநாள் இரவே பாடசாலை மதிலை ஏறிக் குதித்து…
View More ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்பாரதியின் சாக்தம் – 3
சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?… மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்… சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு…
View More பாரதியின் சாக்தம் – 3பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்
லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்…
View More பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்
தலைகளின்றி முண்டங்களாகிக் கிடக்கும் பனைமரங்கள், வெறிச்சோடிப்போன வீதிகள், மிதிவெடி அபாயம், சொல்லி நிற்கும் வீதியோரப் பதாகைகள், உடைந்தும் கூரையின்றியும் இருக்கும் வீடுகள்… கடற்பேரலையால் ஆலயத்தினை நெருங்கவே முடியவில்லை. பெரும்போர் அலையும் ஷெல் வீச்சுக்களும் அழிவுகளும்கூட ஆலயத்தை– அதன் புனிதத்தை– அழிக்க முடியவில்லை…
View More போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்பாரதியின் சாக்தம் – 2
வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்… ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்…
View More பாரதியின் சாக்தம் – 2