” ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவை” .. சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் ..
View More மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை – நூற்றாண்டு நினைவுகள்Tag: இந்தியா
பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்
அப்போதைய பலுசிஸ்தான் தலைவர்களில் ஒருவர் இந்திரா மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் தனது மகளின் திருமணத்தை புதுடெல்லியில் நடத்த விரும்பினார். புதுடெல்லியில் திருமணத்தை நடத்தினால் இந்திரா நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம். முதலில் இந்திராவும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதைப்பற்றி ஆழமாக யோசித்ததை அடுத்து…
View More பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்இன்று மலர்ந்தது சுதந்திரம்
“நீங்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?” என்று நீதிபதிகளை நோக்கிக் கேட்டார் ஓர் அமைச்சர். இன்னொருவர், “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த வேலைக்கு அரசால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விட நீங்கள் உயர்ந்தவர்களா? கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது போல இருக்கிறது,” என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. “இரண்டு நீதிபதிகள் சேர்ந்து ஒரு நாட்டின் விதியை, 120 கோடி மக்களின் விதியைத் தீர்மானிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று நம் முதல்வர் கேட்ட கேள்வி ஆணித்தரமானது. இந்திய அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தைத் தான் sovereign என்று சொல்லியிருக்கிறது. இது போன்ற யாரோ எழுதி வைத்துவிட்டதை வைத்துக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது என்பது சுதந்திரமாகாது…
View More இன்று மலர்ந்தது சுதந்திரம்இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை
உலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்…
View More இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை1947, ஆகஸ்ட் 15 – முதல் சுதந்திர தினத்தன்று. . .
ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இந்தத் திருநாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மாமா திரு. சிட்டி சுந்தர்ராஜன் அப்போது வானொலி ஆசிரியராக, திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். திராவிடக் கழகம் அப்போது திருச்சி மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாதாரணமாக மேடைப் பேச்சாளர்கள் அடுக்கு மொழியில் பிராமணர்களை, வட இந்தியர்களை, ஹிந்தி மொழியை, மற்றும் இதிகாசங்களை…
View More 1947, ஆகஸ்ட் 15 – முதல் சுதந்திர தினத்தன்று. . .திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்
சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும்… தமிழ் கற்பித்த அகத்தியர் திலோத்தமை என்ற நடன மாதுவின் மகன் என்ற வேதகால வர்ணனையை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்…
View More திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்
சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்? எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின்
பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்! 1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள். தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.
கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்
ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்தவர் மகத்தான இந்த இஸ்லாமியர் ….
View More கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்
பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.
View More சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி
காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி