… இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
View More அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)Year: 2009
பெரியாரின் மறுபக்கம் – முன்னுரை
உங்களிடம் சில வார்த்தைகள்…! இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக…
View More பெரியாரின் மறுபக்கம் – முன்னுரைதாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவி
… அவர் சீன மற்றும் இந்திய தத்துவங்களை படிக்க ஆரம்பித்தார். இது அவரை இயற்கையில் இருக்கும் இறை குறித்த உணர்வினை அளித்தது. பின்னர் அவர் தன்னை இறையியலாளன் (theologian) என கூறுவதை தவிர்க்க ஆரம்பித்தார். தன்னை பூமியியலாளன் (Geo-logian) எனக் குறிப்பிட ஆரம்பித்தார். பாரத ஞான மரபு கூறும் “மாறும் பிரபஞ்சத்தின் பின்னால் இருக்கும் மாறா உண்மை” – எனும் உண்மையை அவர் தம்முடைய சூழலியல் பார்வையின் அடிப்படையாகக் கொண்டார்… மானுடத்தின் காயங்களை குணப்படுத்தி ஒருங்கிணைக்கும் அந்த சக்தி பாரதப் பண்பாட்டில் உள்ளது என நாம் உறுதியாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அக்கரை விகசிப்பாக தாமஸ்பெரியை நாம் காண்கிறோம்.
View More தாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவிகிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை
“என் தினத்தை உன்னதமாக்கியது பகவத் கீதை. நூல்களில் முதல் நூல் அது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மகோன்னதம் நம்மிடம் உரையாடுவது போன்றதோர் மகத்துவம் அது – அதில் அற்பமானதென எதுவுமே இல்லை. ஆனால் மகா விசாலமானதும் அமைதி ததும்புவதும், சீரானதுமானதோர் ஆதி பேரறிவு மற்றோர் யுகத்திலிருந்து நாம் இன்று எதிர் நோக்கும் அதே கேள்விகளை உள்ளார்ந்து அறிந்து பதிலளித்துள்ளதாக அது அமைகிறது.” அமெரிக்காவின் மிகச்சிறந்த தத்துவ மேதையான ரால்ப் வால்டோ எமர்ஸன் (1803-1882) பகவத் கீதையை குறித்து எழுதிய வார்த்தைகள் இவை.
View More கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதைஇயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்
.. ஆனால் அதற்கு 10 நிமிடம் முன்னதாக கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒரு பிரத்யேகமான பிரேயர் நடைபெறும். அதற்கும் எல்லா ஹிந்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும் என்றது பள்ளிக்கூட நிர்வாகம். அப்படி வராதவர்களுக்கு பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டார்கள்…. இறுதியாய் என்னைப் பார்த்து “நீ ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கூடாது?” என்று கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.
View More இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்ஓடிப் போனானா பாரதி? – 09
எனவே, பாரதி சீனிவாசனை ‘சிக்க வைத்துவிட்டான்’ என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை’ என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ‘நம்பி இருக்கலாம்.’
View More ஓடிப் போனானா பாரதி? – 09இந்து நேபாளம் – ஒரு பார்வை
இந்துப் பண்பாட்டின் மூலம் இயல்பாய் ஜனநாயகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டிய நேபாளம், இன்று ஜனநாயகத்தையே மறுக்கும் மாவோதிகளின் பிடியில். நலிந்து பட்ட உடலில் நோய்கள் புகுவதுபோல இன்று மோசமான நிலையில் இருக்கும் நேபாளத்தைக் குறிவைத்து மிஷநரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர்களது குறிக்கொள்கள்: கடைசி நேபாளிவரை கிறித்தவனாக மதம்மாற்றுவது.
View More இந்து நேபாளம் – ஒரு பார்வைராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்
ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர். ‘மனப்பறவை’ கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல. ‘எல்லாமே நம்பிக்கையில்தான்’ கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.
View More ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்2009 இல் 1984?
நினைத்துப் பாருங்கள். காம்ப்ரிட்ஜில் பொருளாதாரம் பயின்று முனைவர் பட்டம் பெற்று இந்தியாவின் தலை…
View More 2009 இல் 1984?அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி
தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான்.
அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?…
View More அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி