காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

கருணாவின் கட்சியை காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை அதாவது சில நேரங்களில் அதை சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்தது நினைவிருக்கலாம். அத்தகைய நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவு கரத்தை மீண்டும் துடைத்து கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிருபித்திருக்கிறார் அண்ணன் கருணா. அவரின் ராஜதந்திரத்தை மன்னிக்க “இராச தந்திர”, “இன மான” உணர்வு மிக்க நகர்வை , மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பன பதர்களும் ,மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிக்கின்றன.

View More காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு

அடியவர்க்கும் ஆண்டவனுக்கும் என்றென்றும் அறாத உறவு இருந்து வருகிறது.
பாரில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்று வீறுகொண்டு முழங்குவோரும் பரிபூரணனுக்கு அடிமை செய்ய முந்துகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும் இறைவன் முன் மீளா ஆளாகி அடிமைப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அனைத்துயிர்களையும் பிணிக்கும் பேராற்றல் ஒன்று நின்று நிலவி நம்மை உய்யக் கொள்ளுகிறது. அத்தகைய பேராற்றலுக்கும் நமக்கும் உள்ள உறவே இனிய உறவாக, மெய்யான உறவாக அமைகிறது. பிற உறவனைத்தும் கண்மயக்காய் ஒழியும் பொய்த்தன்மையவே.

View More [பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு

ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

இருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்… எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்… 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்…. கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக் கூடாது என்றும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் புரட்சிகரமானவை… தமிழகத்தின் மாபெரும் தலித் இயக்க முன்னோடி, இந்து சமுதாய சிற்பி சுவாமி சகஜானந்தர் குறித்த விரிவான கட்டுரை இது…

View More ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?

மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம். திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம்

View More நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?

என் பார்வையில் தமிழ் சினிமா

தமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப் பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை. அது சந்தைக்கு தேவையான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை. ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக் கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்…. முற்றிலும் மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைப் பற்றி சொல்கிறேன். இது தமிழ் சினிமா கலாசாரம் எட்டாத ஒரு சிகரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தூர தேசத்தில் உள்ள விஷயம். மொழி ஒடியா, படத்தின் பெயர்….

View More என் பார்வையில் தமிழ் சினிமா

கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்

கசாபுக்கு தண்டனை பெற்றுத் தந்த காங்கிரஸ் அரசு, வழக்கில் பல ஓட்டைகளை உருவாக்கி,கசாப் கும்பலுக்கு உள்ளூரில் உதவிய ‘ஸ்லீப்பர் செல்’ பிரமுகர்களைத் தப்பிக்கச் செய்து விட்டது (முஸ்லிம் வாக்கு வங்கிக்காகவா?)…. கசாபுக்கு தூக்கு நிறைவேற்றப்படுவதை பாகிஸ்தோனோ, உலக நாடுகள் எதிர்க்க வாய்ப்பில்லை. இந்திய முஸ்லிம்கள் எதிர்ப்பார்களோ என்ற அச்சத்தால் தான், இவ்வளவு ரகசியமாக நிறைவேற்றி உள்ளார்கள் என்றால், இது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை கேவலப்படுத்துவதாகும்… ஊழல்கள், அன்னிய முதலீடு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள இது உதவும் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டிருக்கிறது…. நாட்டுநலன் அடிப்படையில் கசாப் தூக்குக்காக அக்கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அக்கட்சியின் சுயரூபத்தை பிரசாரமும் செய்வது அவசியம்….

View More கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்

அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம்…

View More அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

“எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை” – இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி…. எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது…. சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம் காண்பிக்கப்படும்போது, அதை அவர்கள் பலமின்மை என்று தவறாக நினைக்கிறார்கள்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

துப்பாக்கி – திரை விமர்சனம்

ஸ்லீப்பர் செல்களைப்பற்றி முதலில் தமிழில் பேச முனையும் திரைப்படம் என்ற அளவிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. அது என்ன ஸ்லீப்பர் செல் என்றால் இது தீவிரவாதத்தின் நவீன முகம். முதலில் எல்லாம் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தும், ஆஃப்கானிஸ் தானிலிருந்தும், சீனா போன்ற தேசங்களில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் அவை செலவு அதிகம் பிடிக்கும். அதற்காக பயங்கரவாதிகள் கண்டுபிடித்த வழிமுறை தான் இந்த ஸ்லீப்பர் செல்கள். மேலும் ஸ்லீப்பர் செல்களை உபயோகித்து படுபாதக கொலைக்குற்றங்களை அரங்கேற்றுவதன் மூலம் குற்ற வாளிகளை நெருங்குவதும் மிகவும் கடினமான வேலையாக மாறுகிறது. Who is the king pin என்பதை கண்டறிவது மிகவும் கடினமான பணியாக மாறக்குடியது. சுருக்கமாக சொன்னால் இது ஒரு அவுட்சோர்ஸிங் டெக்னிக் (terriost outsourcing technique). தொடர் குற்றச்செயல்களை pert, cpm மாதிரியான மேலாண்மை திட்டங்கள் மூலம் சிறு, சிறு திட்டக்குழுவாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் தொடர்பில்லாத வேறு, வேறு வகை நிகழ்வுகளாக பிரிக்கப்பட்டு ,தொடர்பில்லாத பல பேரிடம் ஒப்படைக்கப்படும். அவரவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறு,சிறு வேலைகளை மட்டுமே செய்வர். யாருக்கும் திட்டத்தின் முழு வடிவம் என்ன என்று தெரியாது. திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதன் முழு வடிவமும் தெரியும். இது ஒரு அசெம்ப்ளி லைன் பணிகள் போன்ற ஒழுங்குடன் செய்து கச்சிதமாக முடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கதற கதற கொன்று ஒழிக்கப்படுவார்கள். இதில் உள்ள சிறிய உறுப்புகளாக இருப்பவர்களைத்தான் ஸ்லீப்பர் செல்கள் என்பார்கள்.

View More துப்பாக்கி – திரை விமர்சனம்

மேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..

அவரது உணர்வுகளை அவர் பால்கனியிலிருந்து பார்க்கும் கோயில் மிருகபலிக் காட்சிகள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. வீட்டை மாற்றிவிடலாமா என்று கூட யோசிக்கிறார்…. மக்களது அப்பாவித்தனத்தையும், பக்தியையும் பயன்படுத்தி அவர்களை ஏய்ப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆன ஒரு யுக்தி சாதனமாகவே இருக்கிறார் பிள்ளையார். கதை எழுதப் பட்ட விதம், இந்த ஆன்மிகப் போலித் தனத்தை சுட்டவில்லை. அந்த விஷயம் கோடி காட்டப் படக் கூட இல்லை. இது அடிப்படையில் ஒரு மேட்டிமைவாத ஐயங்கார் பார்வை மட்டுமே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தக் கதையின் கண்ணோட்டம் இந்து மத அளவில் பொதுமைப் படுத்தப் படக் கூடிய அபாயம் இருக்கிறது…

View More மேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..