அரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்… வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயித்துல சரம் மாதிரி கட்டி ஊர்ல இருக்கற எல்லாத் தெருக்கள்லயும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது.
View More வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்Category: இந்து மத மேன்மை
அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்
ஒன்றே பரம்பொருள் எனினும் பரம்பொருள் நாட்டங்களும் தேட்டங்களும் பல திறத்தின. திருவுருவங்களில் பரம்பொருள் ருசி கண்டவர்க்கும் காண முயல்வோர்க்கும் அநுகூலமான, அழகிய திருவடிவம் விநாயகப் பெருமானின் விசித்திர வடிவம். இத்திருவுருவம் ஏழு தேசங்களின் அஞ்சல் பூக்களில் எழிலுடன் இடம் பெற்றுள்ளது. பாரதம், நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் – என்பன அத்தேசங்கள்.
View More அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்
[இந்து மதத்தை] இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாகத் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும், அதை உருவாக்கிய துறவியும் ஞானியுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிறதென்றால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான். […….]மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழலையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவில்களையும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று.
View More ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்சிந்தனைக்கினிய கந்தபுராணம்
கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.
View More சிந்தனைக்கினிய கந்தபுராணம்இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்
……வேறுபடும் பன்மைத்தன்மைக்கும், மாற்றத்தை அனுமதிக்காத ஒற்றைத் தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசமே இந்து மதத்தை மற்ற மதங்களிடம் இருந்து பிரிக்கும் முக்கிய வேறுபாடு என்று சொல்ல முடியாது; ஆன்மீக மூலங்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்துத்துவமானது ஒரு திறந்த மூல (open source) மதமாக திகழ்வதும், மாற்றக் கூடாத இறையியலைப் போதிக்கும் மற்ற மதங்கள் மூடிய மூல (closed source) மதங்களாக இருப்பதும்தான் மிக முக்கியமான வேறுபாடு.
View More இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்
இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.
சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
View More சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்
இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்…. இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது… இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே…
View More பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2
ஆரிய-திராவிட இனவாதம் பொய் என்றால், சாதி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது? முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது? .. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் “திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்” என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறார். இதே போன்ற பாணர்களைத்தான் செயின்ட் அகஸ்டைன் பாவப் பிறவிகளாகக் கருதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்
நாம் வன்முறையில் இறங்க வேண்டியதில்லை. சாத்வீக வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வெற்றியடையவும் நிறையவே அவகாசம் இருக்கிறது. அதுவே நிரந்தர அமைதியைக் கொடுக்கும் வழியும் ஆகும். ஆனால் அதற்கு முதலில் வெளிப்படையான விவாதமும் விழிப்புணர்ச்சி கொள்வதும் அவசியம் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டும். இந்து தர்மத்திற்கு வரும் சோதனைகளை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தையாவது கொள்வோம். வெளிப்படையாக விவாதிப்போம். இந்து என்ற குடையின் கீழ் ஒன்றுபடுவோம்.
எம்மதமும் சம்மதம் என்பது அனைத்து மதமும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியம் என்பது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை…
View More சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்
இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? … முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும்.
View More ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்