மணிமேகலையின் ஜாவா – 1

மணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது. நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் மணிமேகலை தங்கியிருக்க அங்கு வந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்… சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன். நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்…ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர்…

View More மணிமேகலையின் ஜாவா – 1

வன்முறையே வரலாறாய்… – 6

பின்-காசிமின் வெற்றிகளைப் பறைசாற்றும் சச்-நாமா, அவன் ராவர் நகரைக் கைப்பற்றி அங்கு 60,000 அடிமைகளைப் பிடித்ததாகத் தம்பட்டமிடுகிறது. அதனைத் தொடர்ந்து காசிம் கண்ணில் தென்பட்ட அத்தனை ஆண்களையும் கொன்றுவிட்டு அவர்களின் மனைவிகளையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடித்து ஹிஜாஜிற்கு அனுப்பி வைக்கிறான்…. “வாள்கள் வெட்டிச் சாய்த்த உடல்களிலிருந்து குருதி எரி நட்சத்திரத்தைப் போல உருகி ஓடியது. அல்லாவின் நண்பர்கள் அவர்களின் எதிரிகளை வெற்றி கொண்டார்கள். முஸல்மான்கள் 15,000 காஃபிர்களை வெட்டிச் சாய்த்து, அவர்களின் உடல்களை நாய்களும், நரிகளும் உண்ண வைத்தார்கள். அல்லா கணக்கிலடங்காத கொள்ளைச் செல்வங்களை வாரி வழங்கினான்”….

View More வன்முறையே வரலாறாய்… – 6

ஜானகியின் காதல்

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர். அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இங்கிலாந்து சென்றதும் உனவு பிரச்சனை அவரை வாட்டி எடுத்தது. அது உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன் 33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்… அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. ‘நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்” என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார்….

View More ஜானகியின் காதல்

வன்முறையே வரலாறாய்… – 5

எந்தவொரு மத்தியகால இந்திய, இஸ்லாமிய வரலாற்றாசிரியர் எவரும், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிற்கு மதம் மாறினார்கள் என்னும் குறிப்பினை எழுதியிருக்கவில்லை. உண்மையில், இஸ்லாமிய ஆட்சியின் கொடுமைகள் காரணமாக, எல்லா சாதியினரும் இஸ்லாமிற்கு மாறியிருப்பதைக் காணவியலும்… சுல்தான் குத்புதீன் முபாரக் கில்ஜியால் காயடிக்கப்பட்டு, குஸ்ரூகான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட ஹிந்து, 1320-ஆம் வருடம் கில்ஜியைக் கொன்றான். அத்துடன் நில்லாமல் கில்ஜியின் அத்தனை போர்த்தலைவர்களையும் 20,000 பேவாரி ஹிந்துக்களின் (Bewari or Parwari) துணையுடன் கொன்றழித்தான்… சித்தூர் போரில் (1568) ஏறக்குறைய 40,000 விவசாயிகள் – அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் – 8000 ராஜபுத்திர வீரர்களுடன் இணைந்து மொகலாயர்களுக்கு எதிராகப் போரிட்டனர். இறுதியில் அக்பரின் படைகளால் கைப்பற்றப்பட்ட எந்த விவசாயிகளுக்கும் மன்னிப்பு வழங்காமல், அவர்கள் அனைவரையும் கொலை செய்ய உத்தரவிட்டார் அக்பர்…

View More வன்முறையே வரலாறாய்… – 5

வன்முறையே வரலாறாய்… – 4

காஜியானாவர், ஜிஸியா வரி வசூல் முறைகளைக் கூறிவிட்டு அதற்கும் மேலாக, “வரி கொடுக்கும் காஃபிர் வாய் திறந்து எதுவும் சொன்னால், வரி வசூலிக்கும் அதிகாரி அவன் வாயிலே எச்சிலைத் துப்ப வேண்டும். இவ்வாறு செய்வதனால் அந்த காஃபிர் தான் எத்தனை கீழான அடிமை என்பது, இஸ்லாம் எத்தனை மேலான மார்க்கம் என்பதுவும், பொய்யான கடவுள்களை அவன் வணங்கும் கேவலமும் அவனுக்கு விளங்கும்” என சுல்தானுக்கு எடுத்துக் கொடுக்கிறார்… துன்புற்ற காஷ்மீரி பண்டிட்டுகள் அன்றைய சீக்கிய குருவான தேஜ்பகதூர் சிங்கிடம் தஞ்சமடைந்து, அவரின் உதவியை வேண்டி நின்றார்கள். குரு தேஜ்பகதூர் அவுரங்கசீப்பின் அரசவையை அடைந்து அவனிடம் எடுத்துரைக்கிறார். சினமடைந்த அவுரங்கசீப் தேஜ்பகதூரைச் சிறையிலைடைத்து, வாரக்கணக்கில் துன்புறுத்திப் பின்னர் அவரையும் இஸ்லாமியராக மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தான். இதனை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூரும் அவரது இரண்டு சீடர்களும் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்….

View More வன்முறையே வரலாறாய்… – 4

வன்முறையே வரலாறாய்… – 3

1761ம் வருடம் அகமது ஷா அப்தாலி மூன்றாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு உணவும், நீருமின்றித் தவித்த ஒரு பெருந்திரளான காஃபிர்களை (ஹிந்துக்கள்) நீண்ட தூரம் வரிசையில் நடத்திச் சென்றதாகவும், பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, அவர்களின் தலைகள் வாளால் துண்டிக்கப் பட்டதாகவும் இந்த நூல் சொல்கிறது. பின்னர் அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டனர்… அடிமைகளாகப் பிடிக்கப் பட்டவர்களின் குழந்தைகளும், அந்தப் புரத்திற்குப் பிடித்துச் செல்லப் பட்ட ஹிந்துப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முஸ்லிம்களாக வளர்க்கப் பட்டார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களின் தொகை இந்தியாவில் பல்கிப் பெருகியது… ” ஒவ்வொரு புதுவருடம் துவங்குகையில், ஒவ்வொரு கிறிஸ்தவ ஆணும் ஒரு தினார் ஜிஸியா வரியைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். அந்த வரியைச் செலுத்தாதவரை நீங்கள் நகரத்தை விட்டுச் செல்ல உங்களுக்கு அனுமதியில்லை”…

View More வன்முறையே வரலாறாய்… – 3

ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன…. கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன… சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே வித கலைப்பாணிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் இடையில் கலைரீதியான போட்டியும் இருந்திருக்கலாம்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

பயணம் கிளம்பியதும், முதலில் இறங்கிய இடம் சித்ரதுர்கா கோட்டை.. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும்… கொண்டாட்டங்கள், மாபெரும் வீரச் செயல்கள், சிலிர்ப்பூட்டும் தியாகங்கள், சதி வலைகள், காதல்கள் எல்லாம் கலந்து பெருமூச்சு வரவழைக்கும் கதைகள். கோட்டையிலிருந்து இறங்கும் போது வரலாற்றின் திசை மாற்றங்களை யோசித்துக் கொண்டே வந்தேன்..

View More ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் …

View More குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா