காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

வெறியாட்டம் சம்பிரதாய நாடக வடிவிலோ, அல்லது நவீன நாடகங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நாடகங்கள் போன்றோ இல்லை. ஒப்பாரியிலேயே நாடக நிகழ்வு முழுதையும் மேடையேற்றியிருந்தார் ராமானுஜம். நடு நாயகமான பாத்திரம் ஏற்று நடித்த காந்தி மேரியின் நடிப்பு தோரணைகளும் சரி, பெருந்தேவியும் சரி எல்லாமே பொருத்தமாகத் தான் இருந்தன. முதல் முயற்சியே சிறப்பாக வெற்றி பெற்றது தான்… இப்போது காந்தி மேரி ஒரு நாடகாசிரியராக நம் முன் பொம்மக்காவின் மூன்று பெண்கள் என்னும் நாடகத்துடன் வருகிறார். ஆண்கள் விதித்துள்ள வரம்பிற்கு அடங்கி கடைசியில் குரல் எழுப்புவது பெண்ணியக் குரல், எதிர்ப்புக் குரல் அல்ல. பொம்மக்கா நாடகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறார்கள். இது ஒரு இயல்பான எதிர்ப்புக் குரல், பெண்ணீயக் குரல்… ஃபாஷன் அல்லாத ஒரு காரியத்தைச் செய்துள்ள, ஊரோடு ஒட்டி வாழ மறுத்துள்ள காந்தி மேரிக்கு என் வாழ்த்துக்கள்…

View More காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

விதியே விதியே… [நாடகம்] – 4

என்னங்கடா கதை விடறீங்க..? ஒரு மண்ணோட மைந்தர்களை வந்தேறின்னு சொல்றது இருக்கே எவ்வளவு பெரிய புரட்டு தெரியுமா..? இத்தனைக்கும் எல்லாரும் சந்தோஷமா வாழலாம்னுதான் சொல்றோம். அது பொறுக்க மாட்டேங்குது… அதுதான் இங்கயும் நடந்துச்சு. மருத்துவமனைக்குள்ள கொண்டுபோய் ஆயுதங்களைப் பதுக்கி வெச்சுக்கிட வேண்டியது. அப்பறம் அய்யோ… ஆஸ்பத்திரிக்கு அடிபட்டு வந்த அப்பாவிங்களைக் கூட விட்டு வைக்கலியேன்னு பொலம்ப வேண்டியது. செஞ்சிலுவை சங்க ஆட்களே இவங்களோட அடாவடி தாங்க முடியாம எத்தனை தற்காலிக மருத்துவமனைகளை இடம் மாத்திக்கிட்டுப் போயிருக்காங்க தெரியுமா?…… நூத்துக்கணக்குல ஆயிரக்கணக்குல நாங்க கொல்லப்பட்டது எல்லாமே வெறும் நாடகம்தானா..? எங்களோட அழுகைக்குரல் எல்லாம் வெறும் நடிப்புதானா உங்களுக்கு..? குரங்கு கிழித்தெறிந்த பஞ்சுத் தலையணையாக எம் இனம் உலகெங்கும் அலைய நேர்ந்தது எல்லாம் வெறும் வேஷமா..? (குழந்தையின் குரல் உடைகிறது)…..

View More விதியே விதியே… [நாடகம்] – 4

விதியே விதியே… [நாடகம்] – 3

ஐ.நா. தலைவர்: ரெண்டு பிரிவினரும் சேர்ந்து வாழுங்கன்னுதான் சொல்றோம். அந்த நம்பிக்கைலதான் நல்லெண்ணக் குழுக்களை அனுப்பினோம். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தோம். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஏற்பாடு செய்தோம். போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்து பார்த்தோம்… குழந்தை : கூடவே ஆயுதங்களையும் அது வாங்கத் தேவையான பணத்தையும் இரு தரப்புக்கும் அனுப்பியும் வந்தீர்கள். அல்லவா?… ஐ.நா. தலைவர்: வளரும் நாடுகளில் சண்டை நடப்பதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. மேற்கு நாடுகள் ஆயுதங்கள் தருகின்றன என்றால் வளரும் நாடுகள் ஏன் அதை வாங்குகின்றன என்ற ஒரு எளிய கேள்வியும் இருக்கத்தானே செய்கிறது?…. குழந்தை : கொசோவாவில் இது போன்ற ஒரு பிரச்னை ஏற்பட்டபோது நீங்கள் தலையிட்டு சுய ஆட்சி உருவாக்கிக் கொடுத்தீர்களே. போஸ்னியா, கிழக்கு தைமூர், இரான் இராக், குவைத் என எத்தனை இடங்களில் தலையிட்டிருக்கிறீர்கள்?.. இலங்கையில் அதைவிட நூறு மடங்கு அவலங்கள் நடந்த பிறகும் இறையாண்மை, குடும்பத் தலைவர் என்று கதையளந்து கொண்டிருக்கிறீர்களே… அமெரிக்காவில் கேவலம் வெறும் இரண்டு கட்டடங்கள் மட்டுமே இடிந்து விழுந்தன. இங்கோ ஒரு தேசமே நொறுங்கிக் கிடக்கிறதே..? ஐ.நா. என்பது உலக நாடுகளின் பிரதிநிதியா..? அல்லது அமெரிக்காவின் அடியாளா?….

View More விதியே விதியே… [நாடகம்] – 3

விதியே விதியே… [நாடகம்] – 2

ஆயா கதை சொல்லு ஆயா – குழந்தைகள் நச்சரிக்கின்றன. ஆயா : ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். தில்ஷன் (பக்கத்தில் இருக்கும் இன்னொரு குழந்தையிடம்): ரெண்டு ராஜா இருந்தா நாடு தாங்காது…. மதி: எதிரியோட பலம், வியூகம் தெரியாம சண்டை போடற எப்பவுமே முட்டாள்தனம்தான் இல்லையா? ஆயா : ஆனா, இந்த இடத்துல அபிமன்யு எதிரியோட பலம் தெரியாம மோதலை. ஒத்தைக்கு ஒத்தையா நின்னு போராட வேண்டிய இடத்துல ஒருத்தரை அதுவும் சின்னஞ்சிறு பாலகனை ஒரே நேரத்துல பலர் அநியாயமா சுத்தி வளைச்சுக் கொன்னுட்டாங்க. அபிமன்யுவை ஜெயிச்சது வீரத்தினால இல்லை, வஞ்சத்துனால. மகாபாரதத்துல ஒரே ஒரு அபிமன்யு. ஈழத்துல எல்லாருமே அபிமன்யு. வெளியேறும் வழி தெரியாமல் பத்ம வியூகத்தில் மாட்டிக்கொண்ட தேசம் அது…..

மரண தேவன் : தப்பு செய்தவருக்கு தண்டனை என்றால் அதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.
பரம்பொருள் : என்ன நீ… புரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறாய். நல்லது செய்பவர்களுக்கு நன்மை… கெட்டது செய்பவர்களுக்கு தண்டனை என்பதா நம் தர்மம். அது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை, வாழத் தகுந்ததாக ஆக்கிக் கொள்ள, தாங்களாக உருவாக்கிய ஒரு கற்பனை….தாக்குப் பிடிக்க முடிந்தவற்றுக்குத் தான் இந்தத் தரணி. நம் தர்மம் அதுவே. இதில் உணர்ச்சிகளுக்கு ஏது இடம்….

மனிதர்களுக்கான தெய்வம், குழந்தைகளைச் சந்திக்கக் கிளம்புகிறது. நெற்றி நிறைய திருநீறை எடுத்துப் பூசிக் கொள்கிறது. கைகளில் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்கிறது. தலையில் தொப்பி ஒன்றை அணிந்து கொள்கிறது. சிலுவைக் குறியிட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்கிறது. புத்தனின் பாதக் குறடுகளை அணிந்து கொள்கிறது…

View More விதியே விதியே… [நாடகம்] – 2

விதியே விதியே… [நாடகம்] – 1

நொண்டியடித்து வந்த யாழினி கண்ணைத் திறந்து பார்க்கிறாள்… சில்லில் அவள் காலை ஊன்றும் நேரம் பார்த்து எங்கிருந்தோ வந்த ஷெல், மிகச் சரியாக சில்லின் மேல் விழுந்து வெடித்துச் சிதறுகிறது. யாழினி தூக்கி எறியப்படுகிறாள். தனியாக தெறித்து விழுந்த கால் விலுக் விலுக் என்று துடிக்கிறது. அந்த ஒற்றைக் காலில் இருந்த கொலுசும் ‘ஜல் ஜல்’ எனத் துடித்து அடங்குகிறது….. என் சட்டைல இருந்த வண்ணத்துபூச்சிங்களோட எல்லா நிறமும் அழிஞ்சிபோய் ஒரே சிவப்பு நிறமா ஆகிப் போச்சு. அப்படியே செத்துப் போய் இங்க வந்துட்டேன் என்று சொல்லி அந்த பாப்பா சிரிக்கிறது. அந்த வீட்டுப் பெண் உள்ளே போய் ஒரு குவளையில் நீர் கொண்டு வருகிறார். வந்து பார்க்கையில் நீர் கேட்ட குழந்தையைக் காணவில்லை…. அம்மா, விட்டு வந்த உறவுகள் பற்றியும் நட்டு வைத்த மரங்கள் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். மடியில் விளையாடிக் கொண்டிருந்த என் கண்ணில், கழுத்தில் கட்டியிருந்த சயனைட் குப்பி பட்டது. பற்கள் துறுதுறுத்தன. எம்பி எம்பிப் பிடிக்க முயன்றேன். முடியவில்லை. அமைதியான தேசத்தில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சராசரியாக 60-70 வருட இடைவெளி இருக்கும். நான் அந்த இடைவெளியை ஒரே நொடியில் கடந்தேன்….

View More விதியே விதியே… [நாடகம்] – 1

இன்று போய் நாளை வா – எதற்கு?

“என்னைப் பொறுத்த அளவில், நான் விரும்புவது சிறை வைத்துள்ள சீதையை என்னிடம் ஒப்படைத்து, உன் கட்டுப்பாட்டில் உள்ள தேவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை முறையில் வைக்க வேண்டிய தகுதியில் வைத்து, உன் தம்பி வீடணனை இலங்கைக்கு அரசனாக்கி நீ அவனுக்குச் சேவகம் செய்து வாழவேண்டும். இவ்விதம் செய்வதால் நீ உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. ”அல்லையாம் எனின்” போரை மேற்கொள்” –என்பது தான் இராமன் இக்கட்டத்தில் இராவணனுக்குக் கூறும் அறிவுரை . இராமன் கூற்றாகக் கம்பன் வடித்துள்ள பாடல்களின் சாரம் இது தான்.

இராவணனிடம், அங்கதனைத் தூது அனுப்பிய போது என்ன சொல்லி அனுப்பினானோ ,அதே செய்தியைத்தான் இப்போதும் இராமன் சொல்கிறான்.அங்கதனிடம் சொல்லி அனுப்பியது இதுதான்.

”என்அவற்குஉரைப்பது?என்ன, ”ஏந்திழையாளைவிட்டுத்தன்னுயிர்பெறுதல்நன்றோஅன்றுஎனின்தலைகள்பத்தும்சின்னபின்னங்கள்செய்ய,செருக்களம்சேர்தல்நன்றோ? சொன்னவைஇரண்டின்ஒன்றேதுணிக! “எனச்சொல்லிடுஎன்றான்.

அந்த சந்தர்ப்பத்தில் சொன்ன “ அன்று எனின்” என்பது தான் இப்பொழுது இராவணனிடம் நேர்க்கு நேர் சொன்ன ”அல்லையாம் எனின்” என்பது.

View More இன்று போய் நாளை வா – எதற்கு?

புருஷ சூக்தம்

புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் – வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி… பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்… பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்… வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது…

View More புருஷ சூக்தம்

ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

”அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல் – எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?…இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் – பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்நீராக இருந்தது – வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது – அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது… தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் – அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்?”… சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்த சூக்தங்கள் தான்…

View More ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

மதமாற்றம் எனும் கானல் நீர்

மதமாற்றம் என்பது தாழ்த்தப் பட்டவர்களைப் பொறுத்தவரையில் வெறும் கானல் நீரே என்கிறார் பிரபல ஈழ இலக்கிய நாவலாசிரியர் கே.டானியல்… ‘பஞ்சமர்’ நாவலில் உயர்சாதிக் காரர்களான வேளாளர்களின் சாதித் திமிரும் அட்டூழியங்களும், ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’ நாவல்களில் வேளாளக் குடும்பங்களின் அழிவையும் சிதைவையும், காட்டிய டானியல் அவற்றினின்று மாறு பட்டு, ஒரு சீரான நடையில், அழகான வடிவமைப்பில் ‘கானல்’ நாவலைப் படைத்துள்ளார்… ”ஞான ஸ்நானங்களுக்குப் பின்னாலும் மார்க்கக் கல்யாணங்களுக்குப் பின்னாலும் தீட்சை நாமங்களுக்குப் பின்னாலும் எம்மவர்களின் நாமாவளிகள் மாறியதல்லாமல் நடைமுறையில் இன இழிவுப்பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை… “

View More மதமாற்றம் எனும் கானல் நீர்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8

விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் எட்டு மலர்கள் யாவை? அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இல்லை! அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்…. திருமாலின் இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பல பகுதிகள் சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன…”நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள, நின் தண்மையும் சாயலும் திங்கள் உள” – சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம்…

View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8