வியாளம் – மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. எஸ்.வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்…. இளங்கலை வரலாறு படிக்கும் மாணவருக்கு கருஞ்சுழி நாடகத்தில் ஒளிப் படிமங்கள் வாழ்க்கையின் பாதையை நிச்சயித்து விடுகிறது. அலைமோதும் மன நிலையில் பல உணர்வுகள் கொட்டி அலைக்கழிக் கின்றன. மாட்டுத் தொழுவத்தில் தாத்தாவின் முறுக்கேறிய அழுகையில் புதிதாகப் பிறக்கும் பாடல்களின் குரல் வலிமை தனக்குக் கிடைகாதா என்று ஏங்கி தொழுவத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகச் சொல்கிறார் வேலாயுதம். க அபூர்வமான சோகத்தின் கனம் நிறைந்த கணங்கள் அவை… அவர் பயிற்றிவிப்பாளராகவே இன்றோ நாளையோ என்ற தவிப்பிலேயே வாழ்ந்தவர். வாழ்ந்தவரா, சாவை ஒத்திப்போடும் தன் வல்லமையைச் சோதித்துக்கொண்டிருந்தவரா? நாடகத் துறையில், இளம் முனைவர் பட்டத்துக்கான மாணவராக மறுபடியும் ஒரு முயற்சி….
View More தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்Category: இலக்கியம்
கம்பனும் இலங்கையும்
கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…
View More கம்பனும் இலங்கையும்சக்திதான் என்றும் !
தோளி ருப்ப தெல்லாம் -மற்றோர்
துயர்து டைக்கவென்றே! தம்பி
காளி அடங்கமாட்டாள்! செல்வக்
கட்டி லென்று கண்டோம்!….
காடும் சடையும் வேண்டாம்! இங்கே
கலி பிளக்க வந்தோம்! அவளைப்
பாடு தம்பி பாடு! இந்தப்
பாருன் கையி லாடும்!…..
ஆடுகின்ற கடலில் -நம்மை
ஆட்டு கின்ற மனதில் -இருளைச்
சாடுகின்ற கதிரில் -அறவோர்
சாந்த மான நகையில் -ஆங்கோர்
வேடு வச்சி நடையில் -நெஞ்சம்
விம்மு கின்ற கலையில் -தோன்றிப்
பாடும் அன்னை சக்தி! பார் பார்!
பரவுதங்கு செந்தீ!…
கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை
முருகன் திரு அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் 122 அடிகளில் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்… கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து, மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத்தளித்து… போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகமளிக்கும் முகமதியும் — தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்… பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சமகற்றும் அயில் வேலும்…
சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை
சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது…. தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் என்ற குறளில், பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால் என்ன? இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்….கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்….
View More சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வைவிதியே விதியே… [நாடகம்] – 7
இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, இன்றைய ராஜபக்சே வரை அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்தர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டவர்கள். தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள். சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன… கிறிஸ்தவன் தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச்செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில் பிரிவினையின் விஷத்தைக் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறான். சமத்துவ நெல்வயல்களில் வெறுப்பின் தீயை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான்…. எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அதைத் தீர்த்து வைக்கும்படி கிறிஸ்தவ தேசங்களையும் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையிடமும்போய் அனைவரும் கையேந்துகிறார்கள். கத்தியால் குத்தியவனிடமே போய் கருணை மனு கொடுத்தால் என்ன ஆகும்?….
View More விதியே விதியே… [நாடகம்] – 7புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…
அடிப்படையில் இது ஒரு புராண மீட்டுருவாக்கக் கதை. இதை வைத்துக் கொண்டு ஒரு அழகான, கவித்துவமான, தத்துவமும் அங்கதமும் சுய விமர்சன நோக்கும் சுவாரஸ்யமும் இழையோடும் ஒரு இலக்கியத் தரமுள்ள ஒரு புதுமையான *நவீன* சிறுகதையை புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார்… கட்டுடைப்பு” என்ற வகையில் கதையின் போக்கில் இரண்டு சிறிய மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறார்… எது அந்த பொற்பிரம்பு? இயற்கையா? விதியா? பிரபஞ்ச லீலையின் ஒரு சாயலா? அல்லது இவற்றை எல்லாம் கட்டி வைத்து விளையாடும் ஒரு இலக்கிய கர்த்தாவின் எழுதுகோலா? அவனது எழுத்தே தானா அந்தப் பொற்பிரம்பு? …
View More புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…விதியே விதியே… [நாடகம்] – 6
ஒருவர் நிதானமாக நடந்து வந்து மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்கிறார். இன்னொருவர் வந்து அந்தத் தீயில் சிகரெட் பற்ற வைத்துக் கொள்கிறார். இன்னொருவர் அடிக்கடி துண்டுகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்… குழந்தை : நாம சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கோமா. இல்லைன்னா ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டோமா?….. ஒரு தலைவன் என்பவன் தன் பின்னால் நடுநிலையாளர்களும் இன்ன பிறரும் ஏன் எதிரணியினரும் அணிவகுத்து நிற்க போதிய நியாயங்களை ஏற்படுத்திக் கொடுப்பவனாக இருக்க வேண்டும். விமர்சன மழைத்தூறல்கள் இடைவிடாமல் பொழியும்போது தாங்கிக் கொள்ளவொரு தார்மிகக் குடையைக் கொடுக்க வேண்டும். ஆனால், எங்களை முடிவற்றுப் பெய்யும் மழையில் நனையவிட்டார்கள். அடுத்தவருக்காக எவ்வளவு நேரம்தான் ஒருவர் மழையில் நனைவது..?….
View More விதியே விதியே… [நாடகம்] – 6விதியே விதியே… [நாடகம்] – 5
பிரதமர்: உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்… குழந்தை: விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தோமே… எங்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..? கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல… யாராக இருக்கிறாய் என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்…
View More விதியே விதியே… [நாடகம்] – 5இராம காதையில் இரு தியாக தீபங்கள்
வனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்.. இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள் சுமத்திரை.. இலக்குவன் சமைத்த பர்ணசாலையைப் பார்த்த இராமன் நெகிழ்ந்து போகிறான். இலக்குவன் எப்படி இந்தப் பர்ணசாலையைக் கட்டி முடித் தான்? என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான்?’ என்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான்…. ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை ஏவுகிறான். இந்த வேலை யார் மீது பிரயோகித்தாலும் அவர்கள் அழிவது திண்ணம். இதைக் கண்ட அனுமனும் அங்கதனும் கூட ஓடி வருகிறார்கள் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள. அங்கதனும் வாலியால் அடைக்கலமாகக் கொடுக்கப் பட்டவன் தானே! அதனால் எல்லோரையும் முந்திக் கொண்டு இலக்குவன் ஓடி வந்து வேலை ஏற்கிறான்…
View More இராம காதையில் இரு தியாக தீபங்கள்