கோபம் கொண்ட இடிகளே இந்த உருவத்தில் வந்திருக்கின்றன‘ என்று நினைக்கும்படியாகவும்; விரிந்து திரண்டிருக்கும் இருட்டு, இரண்டாகப் பிரிந்து, இரண்டு கூறுகளாக மாறி ஒன்றை ஒன்று முறைமுறையாக (மாறிமாறி) நெருக்கி முட்டித் தள்ளி எருமைக் கடாக்கள் பொருதுநிற்க,(கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 16-20. கோசல நாட்டு வர்ணனை)
View More கம்பராமாயணம் – 7 (Kamba Ramayanam – 7)Category: இலக்கியம்
கம்பராமாயணம் – 6 (Kamba Ramayanam – 6)
கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 11-15. கோசல நாட்டு வர்ணனை.
கரிய நிறத்ததான கடல் அலைகளில் (கூட) சரயு நதியில் பெருகிவரும் புதிய நீரில் முங்கிக் குளிக்கும் பெண்கள் சூடியிருக்கும் பூவும், பூசியிருக்கும் கஸ்தூரியும் கலந்து அந்த மணமே வீசுகிறது என்றால், தேன்போன்ற இனிமையான மழலைச் சொல் பேசுவதும் (கொஞ்சிப் பேசுவதும்); கூர்மை மிகுந்த கடைக்கண் பார்வையை வீசுவதுமாக, அங்கே (கரைகளில்) நிற்கும் இளைஞர்கள் விருப்பத்துடன் (மனமார்ந்த காதலுடன்) பார்த்தபடி நிற்கும் (நீராடும்) பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா?
கம்பராமாயணம் – 4
கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம், பாடல்கள் 1-5.
வயல் வரப்புகளில் எல்லாம் முத்துக்கள் மண்டியிருக்கும். நீர் ஓடும் மடைகளில் எல்லாம் சங்குகள். நிரம்பிய வெள்ளம் ஓடும் கால்வாய்களின் கரையெல்லாம் செம்பொன்னால் ஆனவை; எருமைகள் படுத்ததனால் ஏற்பட்ட குழிகளில் தேங்கிய நீரில் செங்கழுநீர் மலர்கள் பெருங்கூட்டமாகப் பூத்துள்ளன; சமப்படுத்திய வயல்களிலோ பவளமணிகள் பரவியுள்ளன. சாலி என்னும் உயர்வகை நெல் நிரம்பிய வயல்களில் அன்னப் பறவைகள் உலவுகின்றன; அருகிலுள்ள கரும்பு வயல்களில் கருப்பங்கழிகளுக்கு இடையிலிருக்கும் கூடுகளிலிருந்து செந்தேன் பொழிகின்றது…
கம்பராமாயணம் – 3
கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் 3 ஆம் மற்றும் இறுதிப் பகுதி.
இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது.
மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள் அறுந்து போகுமாறு நதி ஓடுகிறது; யானையும் ஓடும்போது அதனை அலங்கரிக்கக் கட்டியுள்ள மணிகள் அறுந்துபோகுமாறு ஓடக்கூடியது. நதியின் கரையெங்கிலும் அதன் வெள்ளம் பெருகி…
View More கம்பராமாயணம் – 3பாலராமாயணம் – 2
சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம்.
அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்….
View More பாலராமாயணம் – 2அனுமன் வேதம் – கவிதை
தளர்வு தகர்க்கும் சோம்பல் துடைக்கும்
மயக்கம் அறுத்து மனம் தெளிவிக்கும்
மாண்பு பெருக்கும் மாருதி மந்திரம்
அச்சம் தவிர் அச்சம் தவிர் என
அறைந்து முழங்கும் அனுமன் வேதம்
அன்னை காளி – கவிதை
(மூலம்: சுவாமி விவேகானந்தர்)
நண்பா
துக்கத்தையும் துணிந்து காதலி
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்.
அவர்-அவன்
பேர்சொல்லப் பிள்ளையும் பேரனும் பேத்தியும்
பெற்றதில் பெருமை கொண்டார்.அவன்
பாருக்குள் நற்றமிழ் நாட்டினை விட்டிட
‘போர்’என்று புலம்பி நின்றார்…
வாய்ப்புள்ள போதெல்லாம் பேசிக் கொள்வார்.அவர்
வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வார்
‘வாய்ப்’பினில், ‘சாட்’டினில் தம்மக்கள் பெருமையை
வாயாறப் பீற்றிக் கொள்வார்…
இந்து மகத்துவக் கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.
கடவுள், மனிதன், கடைசி யுத்தம்
“என் சிருஷ்டி திசைக்கொன்றாய்
ஊதிய பஞ்சாய் வலியால் கதறியது.
யானை மிதித்த பூவாய்
அதன் மூச்சு திணறியது.”
