அவசியத்திற்கு அதிகமாக மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பது சாத்திரம். “கோடரியை கண்டதும் மரம் பயந்து நடுங்குகிறது” என்று வேதம் இதற்கு விளக்கம் சொல்கிறது. இந்த உருவகத்தின் மூலம் மரத்தை உணர்வும், அறிவுமுள்ள ஒரு ஆன்மாவாகக் கற்பித்து அதை மதிக்கக் கற்றுத்தருகிறது வேதம்….நம் நதிகளையும், மரங்களையும், சோலைகளையும் அசுத்தம் செய்யாமலும், அழிக்காமலும் போற்றிப் பாதுகாப்பது சமுதாயக் கடமை மட்டுமல்ல தெய்வீகக் கடமையும் ஆகும் என்று உணரவேண்டும்.
View More இயற்கையைக் காக்கும் இந்துமதம்Category: சமூகம்
இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…
அள்ளக் குறையாத அமுதம் – 1
மழைக்காலத்தில் ஒருநாள் இரவு வெகு நேரம் கழித்து நெடுந்தூரம் நடந்து களைத்த வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் ஆபுத்திரனிடம் “எங்களுக்குப் பசியாக இருக்கிறது. உணவு கிடைக்குமா?” என்று கேட்டனர். மற்றவர்களின் பசியைப் பார்க்கப் பொறுக்காத ஆபுத்திரனுக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அவனுடைய பிட்சைப் பாத்திரம் அலம்பிக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. என்ன செய்வது?
View More அள்ளக் குறையாத அமுதம் – 1யானை இறைத்த சோறு!
“நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். அதை அனுபவிப்பதில் தவறென்ன?” நியாயமான கேள்விதான். நீங்கள் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளும், அது தேவையான மற்றொருவருக்கு விலையை ஏற்றிவிடுகிறது. உதாரணமாக, யாருக்காவது வேண்டுமோ இல்லையோ சில வீடுகளில் டி.வி, மின்விசிறி இவை ஓடியவண்ணம் இருக்கும்…
View More யானை இறைத்த சோறு!தலித்துகள் வீட்டுக்கே செல்லும் திருப்பதி வெங்கடாசலபதி
தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் ஆகியோரிடம் ஹிந்து மதத்தின் பெருமையை எடுத்துச் செல்லும்விதமாக பல்வேறு முயற்சிகளை…
View More தலித்துகள் வீட்டுக்கே செல்லும் திருப்பதி வெங்கடாசலபதிஅக்கரைப் பச்சை
நமது சமூகத்தில் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) என்றாலே அவர் வெறும் கோழையாக, சுயநல வாதியாக, சமூகப் பொறுப்பற்றவராக இருப்பார் என்கிற வகையில் மறைந்த பெரும் எழுத்தாளர் சுஜாதாவிலிருந்து, ‘கற்றது தமிழ்’ படம் எடுத்த இயக்குனர் போன்றோர் வரை ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் உள்ளூரில் வாழ்க்கை நடத்துபவர்களை விட, வெளிநாடுகளில் வாழ்ந்து அதன் சவால்களும் சங்கடங்களும் அனுபவித்து வெற்றி அடைந்தவர்கள், மன உறுதி, செயல் திறன், தைரியம், பொறுமை என்று பலவற்றிலும் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
View More அக்கரைப் பச்சைகாஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்
“நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்” என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு “நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்” என்றார் ரோஷன் லால்.
View More காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்தைபூசம் காவடி, லண்டன் – வீடியோ
லண்டன் ஈஸ்தாமில் (ஈஸ்ட் ஹாம்) உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் தைப்பூசக் காவடி…
View More தைபூசம் காவடி, லண்டன் – வீடியோஅலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து
அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.
View More அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து