அச்சம் மீதூர தமிழர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.. புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன.. இலங்கையின் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாக 150 திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம்.
View More இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!Category: ஆன்மிகம்
பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
இடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.
View More பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்மஹா யோகம்
…உபதேச உந்தியார் எனும் உபதேச நூல் முதலாக வந்தது. அது உருவான கதையைக் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். அவரது முதன்மை அடியார்களில் ஒருவரான முருகனார்தான் அதற்குக் காரணகர்த்தா ஆனார். முருகனார் ஒரு தமிழ் பண்டிதர். அவர் ரமணரை முதன் முதலில் பார்க்க வரும்போதே ஒரு செய்யுள் இயற்றிக் கொண்டு வந்தபோதும், ரமணரைக் கண்ட மாத்திரத்தில் சப்த நாடியும் ஒடுங்கி அவரது ஒளி பொருந்திய கண்களையும் முகத்தையும் பார்த்துப் பிரமித்துப்போய் செய்வதறியாது நின்று விட்டார். ரமணருக்கு நிலவரம் தெரிந்து சற்றே கிண்டலாக,…
View More மஹா யோகம்தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்
தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம்.
View More தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4
பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4புனிதமான போர்க்களம்
“ கீதை எப்போது சொல்லப்பட்டது என்பது நமக்கு முக்கியமில்லை. அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்,” என்ற விவேகானந்தரின் அற்புதமான வாசகம் நினைவிற்கு வந்தது.
View More புனிதமான போர்க்களம்சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை
ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.
View More சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை“தன்பெருமை தான் அறியான்”
நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.
View More “தன்பெருமை தான் அறியான்”பக்தி ஓர் எளிய அறிமுகம் – 3
பக்தனுடைய சம்பந்தம் பெருமாளுடைய சம்பந்தத்தை விட பெருமை வாய்ந்தது. அதைப் பற்றி உயர்வாக பல ஆழ்வார் பாடல்களில் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் கூட்டம் இருக்கும்போது நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை, வீட்டில் படித்ததைக் கோயில் வரிசையில் மறந்துவிடுவதுடன், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறோம்.
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 3அற வழியில் நால்வர்: ஒரு பார்வை
நான்கு வழிகளில் வந்த நால்வர்களின் வாழ்நாள் எல்லை நமக்கு உணர்த்துவது என்ன? நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள்… எந்த வழியையும் ஒருவர் பின்பற்றலாம் எனும்போது, அந்த நான்கு முறைகளில் ஓர் உயர்வு-தாழ்வு இருப்பது போல் காணப்படுவதின் உள்ளர்த்தத்தை இப்போது நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
View More அற வழியில் நால்வர்: ஒரு பார்வை