சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்… காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.
View More தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்
புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது… கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்… எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே…
View More பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை
சுவாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, அயர்லாந்திலிருந்து பாரதம் வந்து, இந்நாட்டின் தவப்புதல்வியாகவே வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதை. அவரது 150-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகத்தில் ரத யாத்திரை நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
கோவையில் ஜனவரி 22,2018 (இன்று) தொடங்கி, சென்னையில் பிப்ரவரி 22,2018 முடிவுபெறும் இந்த மாபெரும் ரத யாத்திரை, 30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3,000 கி.மீ. தொலைவைக் கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரத யாத்திரையை ஒட்டி, சகோதரி நிவேதிதை குறித்த கட்டுரை இங்கு வெளியாகிறது…
View More பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதைமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்
பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்
ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்… ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?… உண்மையில் வைரமுத்துவின் இத்தகைய திரிபுவாதங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல. தமிழ் இலக்கியங்களின் மீதும் தமிழ்நாட்டின் இந்து சமய மரபுகளின் மீதும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இவற்றைக் காண முடியும்….
View More ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]
சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்… இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்… பூவுக்கு முள் முரண்…நீருக்கு நெருப்பு முரண்… இரவுக்குப் பகல் முரண்… சூரியனுக்கு நிலவு முரண்… உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது… அதுபோலவே முரண்களாலும் ஆனது… அறங்கள் முரண்படவில்லை… இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே அகலாது அணுகாது… நல்லது ஐயனே… இப்போது லேசாகப் புரிகிறது…
View More திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]அக்பர் என்னும் கயவன் – 14
முகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது…. குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமதிப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா போன்றவர்களுக்குத்தான் அக்பரின் அரசவையில் மரியாதை இருந்தது.
View More அக்பர் என்னும் கயவன் – 14அக்பர் என்னும் கயவன் – 13
அக்பரையும் அசோகரையும் ஒப்பிடுகிற அறிவிலிகளைக் கண்டு அக்பர் சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கலிங்கத்தை வென்ற அசோகர் வன்முறையை முற்றிலும் ஒதுக்கித் தள்ளியவர். ஆனால் அக்பரோ கொலைகளிலும், கொள்ளைகளிலும் மகிழ்கிற அற்பனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்ததொரு கயவன். அக்பரால் வெல்லப்பட்ட சிற்றரசுகள் அனைத்திலுமே அக்பரின் வாள் இடைவிடாத படுகொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும், வழிபாட்டுத் தல அழிப்புகளையும், பெண்களைக் கவர்ந்து செல்வதனையும், அப்பாவிகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையும், கோவில்களை அழித்து மசூதிகளாக்குவதனையும்…..இன்ன பிற கொடுமைகளையும் இடைவிடாமல் செய்திருக்கிறது என்பதினை அக்பரின் வரலாற்றாசிரியர்களே சந்தேகமின்றி குறித்து வைத்துள்ளார்கள்….
View More அக்பர் என்னும் கயவன் – 13ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை
ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே… ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமையும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக திரை மறைவு சக்திகளுக்குக் கிடைத்த பொன் முட்டையிடும் வாத்து அவர்….
View More ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வைஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்
ஜனவரி முதல் தேதியன்று கோவில்களைத் திறந்து வைத்து, நள்ளிரவு பூஜைகள் செய்யப்பட்டுப் பொதுமக்கள் கடவுள் தரிசனம் செய்வது இந்தியாவில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது. இது, வேத நாகரிகத்திற்கும், ஆகம விதிகளுக்கும், ஹிந்து கலாச்சாரத்திற்கும் விரோதமான செயலாகும். ஆயினும் ஹிந்துக் கோவில்கள் பெரும்பாலும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுகளின் அற்நிலையத்துறைகள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. ஹிந்து மக்களும் இதன் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நடுநிசி நேரத்தில் கோவில்களுக்கு வந்து, வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர். ஆனால் விவரம் அறிந்த ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும், மிகவும் வருத்தமுற்று இந்த வழக்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.. பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆயினும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் அரசு அறநிலையத்துறைகள், ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஆங்கிலப் புத்தாண்டைக் கோவில்களில் கொண்டாடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்….
View More ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்