இரு பறவைகள், இணைபிரியாத் தோழர்கள், ஒரே மரத்தில். ஒன்று கனிகளைத் தின்கிறது, மற்றொன்று தின்னாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது… சத்தியமே வெல்லும், பொய்மையல்ல – சத்தியத்தின் பாதையே தெய்வீக வழி – ஆசையடங்கிய ரிஷிகள் சென்றடைவதும் சத்தியத்தின் மேலாம் இருப்பிடமே… சொல் விளக்கங்களால் அடைவதல்ல அந்த ஆத்மா – மேதமையால் அல்ல, கேள்வியின் மிகுதியாலும் அல்ல – அதற்காக ஏங்குபவன் அதனையடைகிறான். அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா…. வலிமையற்றோன் அடைவதில்லை ஆத்மாவை – ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை – சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது…
View More முண்டக உபநிஷதம்Tag: தத்துவம்
இந்திய பாரம்பரிய அறிவியல்
இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள், இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்!… நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்… வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும்…
View More இந்திய பாரம்பரிய அறிவியல்மலரும் பிரபஞ்சம்
முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா?… சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங்… இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்… பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன… பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது… கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவை உருவாகின்றன [உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ]…
View More மலரும் பிரபஞ்சம்சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்
உடலை மணல்மூடி தியானத்தில் லயித்திருந்தபோது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது – நவாப் படைகளிலிருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்றபோது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்… ”வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்”…
View More சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை
சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் [..] எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..[..]
View More பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வைதிருப்பலி [சிறுகதை]
பலர் என்னை எச்சரித்ததுண்டு. போனவாரம் கூட மேலவீதி ஸ்ரீனிவாசன் சொன்னான், அவர் என்னை கிறிஸ்தவராக்க முயற்சி செய்வார் என்று. அதற்காகவே அவர் பழகுகிறார்… அது ஒரு போர்ப் பிரகடனம். அவர்கள் ஆன்மாக்களை அவர்களின் ஆத்ம ஆதாயத்துக்காக ஏசுவுக்கு வென்றெடுக்கும் சிலுவைப் போரின் பிரகடனம்… ஒயினையும் ரொட்டியையும் மறைவாக எடுத்துக் கொண்டு அக்குகைக்கு வந்தோம். யாரும் அறியா வண்ணம் இரகசியமாக உண்மையான உயிருள்ள தேவனை ஆராதித்தோம்.
View More திருப்பலி [சிறுகதை]அறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]
அப்படிப்பட்டவன், ஒருவர் சொல்லை, அது அவனை வாழ்த்துவதாகவோ அல்லது தாழ்த்துவதாகவோ எப்படி இருந்தாலும், கேட்டுக் கொண்டிருப்பானே தவிர, அது தன்னை மிகவும் பாதிக்கும் அளவு அதை பொருட்படுத்த மாட்டான்… ஞானிக்கு அத்வைதம் என்பது அனுபவமாய் இருக்கிறது; சாதகனுக்கோ அத்வைதம் தியானப் பயிற்சிக்கு உதவுகிறது… நம்மை அறியாது இறைவனுக்கு நாம் செய்யும் பாபங்களை குருவின் அருளினால் கழுவிக்கொள்ள முடியும். ஆனால் குருவிடம் நாம் செய்யும் அபசாரத்தை இறைவனாலும் மாற்ற முடியாது…
View More அறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை
துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..
View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வைகவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்
தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…
View More கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்அறியும் அறிவே அறிவு – 5
சீட்டாட்டத்தின்போது விழும் சீட்டுகள் விதி; அதை வைத்துக்கொண்டு ஆடுபவரின் திறன் மதி என்பார் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்… நாம் மற்ற விலங்கினங்களைவிட இயற்கையில் பலம் இல்லாது உள்ளோம். அறிவே நமது பலம். எதையும் நல்ல முறையிலோ தீய முறையிலோ பயன்படுத்திக் கொள்வது அவரவர்கள் அறிவு முதிர்ச்சியைப் பொருத்து அமைகிறது.
View More அறியும் அறிவே அறிவு – 5