ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி

எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும். நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்… புலனுகர்வுகள் – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்… மேலைக் காற்று இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் , சுதேசிப் பார்வைகளையும் இழந்து – அபத்தப் பார்வைகளையும் அலக்கியப் பார்வைகளையும் வளரவிட வேண்டாம் என்பதுவே நோக்கம்….

View More ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்…. பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்…. சிரசில் சந்திரகலை மிளிர்பவரே! ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்….

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

அங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்…. குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன்? யமனை இது அப்புறப்படுத்துமா? நன் மதி பெற்றவனே! பரமனது கமலப் பாதங்களைப் பணி; பேரின்பத்தை அடை…

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

என்னதான் செய்தது பக்தி இயக்கம்?

பகுத்தறிவற்ற சடங்குகள் கொண்ட வேள்வி அடிப்படையிலான வைதீக மதத்தில் ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லை. சமணமும் பௌத்தமும் கொல்லாமையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதித்தன. அவையே ஒழுக்க நெறிகளை வளர்த்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை வளர்த்தன. ஆனால் பக்தி இயக்கம் என்ன செய்தது? பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது. வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். ஆனால் உண்மையில் வரலாறு சொல்வது என்ன?…. பக்தி இயக்கம் உருவாக்கிய அனைத்திலும், கோவில் சிற்பங்களோ, இலக்கியங்களோ அன்றாட வாழ்க்கை வாழும் சாதாரண எளிய மக்களின் காட்சிகளை காணலாம். கழை கூத்தாடிகள், பிரசவம் பார்க்கும் மருத்துவ மகளிர், உழவர், மாடு மேய்ப்போர், வேடர் – என….

View More என்னதான் செய்தது பக்தி இயக்கம்?

பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..

View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்… இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…

View More கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்…

View More பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

சில ஆழ்வார் பாடல்கள் – 2

இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள்… அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு – இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்… உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்…

View More சில ஆழ்வார் பாடல்கள் – 2

சில ஆழ்வார் பாடல்கள் – 1

ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்… நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது… நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுள் (cosmic God) என்ற சமய தத்துவத்தை… (ஊட்டி இலக்கிய சந்திப்பில் பேசியது).

View More சில ஆழ்வார் பாடல்கள் – 1