திராவிடம் என்பது தென்னிந்திய தேசத்தையும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அவர்கள் புவியியல் ரீதியாக விந்திய மலைகளின் தெற்கில் வாழ்கிறார்கள். மூன்று பக்கமும் திரவத்தால் (கடல்) சூழ்ந்த இடமாகையால் திராவிடம் என்ற பெயர் உருவானது. விந்திய மலைக்கு தெற்கெ உள்ள நிலப்பகுதி பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்படுகிறது. அவையாவன : – கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு(கேரளாவும் சேர்த்து) , குஜாராத், மஹாராஷ்டிரம் ஆகும்.
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2Tag: திராவிடம்
தேவையா இந்த வடமொழி வாரம்?
அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. … பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம்
View More தேவையா இந்த வடமொழி வாரம்?பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்
தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கிய இந்துத்துவ சிந்தனையாளர் தனி உரையாடலில் ‘பெரியார் அன்றைக்கு இந்த மண்ணுக்கு ரொம்ப தேவையாக இருந்தாரப்பா… அவரும் நம்ம சமுதாயத்தை நேசித்தவர்தான்.’ என்றார். ஒரு ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்பு வெளியிட்ட தேசபக்தர்கள் மகான்கள் பிறந்த நாட்கள் நினைவு நாட்கள் பட்டியலில் ஈ.வே.ராமசாமி பெயரும் இருந்தது. சூழ்நிலை புரிந்திருக்கும். இத்தகைய சூழலில்தான் ”ஈ.வெ.ராவின் மறுபக்கம்” என்ற இந்த புத்தகம் வெளியானது. இன்றைக்கு ஈ.வே.ராமசாமியை எவராவது இந்துத்துவர் ‘பெரியார்’ என்றால் அது பழக்க தோஷமாக மட்டுமே இருக்கும். இந்த நூலை எழுதியவர் நிச்சயமாக திராவிட இயக்க வரலாற்றில் ஊறித் தோய்ந்து போன ஒரு பெரிய வரலாற்றாராய்ச்சியாளராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. அவர் ஒரு இளைஞர்….இன்றைக்கு நாம் ‘taken for granted’ என எடுத்து கொள்ளும் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட எப்படி போராடி வெல்லப்பட்டன என்பதை இந்த நூல் வெளிக் கொணர்கிறது. நீதிகட்சியின் பிம்பத்தை உடைக்கும் அதே நேரத்தில் ஹிந்து சமுதாயத்தின் வரலாற்றில் இருக்கும் இருண்ட பக்கங்களையும் நம் முன் நிறுத்துகிறார் ம.வெங்கடேசன்….
View More பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…
ஏனெனில் இது மூத்தார் வழிபாட்டு மனநிலை அல்ல… திராவிடமெனும் முற்றிய இனவாத மனநோய்… ஜெயமோகனின் கருத்தில் ஆர் எஸ் எஸ் சதியை கண்டுபிடிக்கும் அ.மார்க்ஸ் மூத்தார் வழிபாட்டு மன உணர்விலிருந்து அதை பேசவில்லை. ’இதை ஏன் தேவபாடைக்கு ஜெயமோகன் சொல்லக்கூடாது?’ என அறைகூவலிடும் சித்தாந்தவாதி இதை மூத்தார் மனநிலையிலிருந்து முழங்கவில்லை. இந்த மனநோயின் மூலகர்த்தா ஈவேராமசாமியே தான்…. ஈவேராவின் பகுத்தறிவு நமக்கு சொல்லி தந்தது எந்த கருத்தாக்கத்திலும் எந்த பாரம்பரிய வெளிப்பாட்டிலும் இன-வாத சூழ்ச்சிகளை கண்டுபிடிக்கத்தான். அதைத்தான் இன்றைக்கு அவர் வழி வந்தோர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்….
View More ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…பாரதி மரபும்,திரிபும் – 6
ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, கள்ளி, சரிவு, முயல். இது தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்.பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஈனம் என்ற வார்த்தையை பாரதி எந்த அர்த்தத்தில் பறையர்களுக்குப் பொருத்தினார்? ‘ஈனப் பறையர்களேனும்’ என்ற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே பாரதி பயன்படுத்தினாரா? பாரதியின் கருத்து என்ன? பறையர்களைப் பற்றிய பாரதியின் கருத்து மிகத்தெளிவாகவே இருக்கிறது…. பாரதி ‘ஈனம்’ என்ற சொல்ல இழிவுநிலை, கீழ்மை, தாழ்வு என்ற பொருளிலும் பயன்படுத்தி இருப்பதால் ஏன் மோசமான விளித்தலுக்கு இந்த கவிதையில் பயன்படுத்தியிருக்ககூடாது என்ற கேள்வியும் எழலாம்.
View More பாரதி மரபும்,திரிபும் – 6பாரதி: மரபும் திரிபும் – 5
இந்து என்பதின் திரிபே இந்தியா என்பதுதான் பாரதியின் கருத்து என்று சொன்னால் மதிமாறனின் விமர்சனம் தேவையற்றது. ‘பாரதம், இந்தியா’ என்ற வார்த்தைகள் பாரதி பயன்படுத்தியிருப்பது பார்ப்பனியச் சிந்தனையின் வெளிப்பாடு என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் மதிமாறன் பாரதி இந்தியா என்ற பெயரை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்று தனியாக விமர்சனம் வைக்கிறார். பார்ப்பனீய பூச்சாண்டியைக் காட்டி வளர்ந்த திமுக அரசு ஜூன் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இந்தப் பாடலை அறிவித்தது. பார்ப்பினிய எதிர்ப்பில் ஊறித்திளைத்த திமுக அரசாங்கம் இந்தப் பாடலில் பரதகண்டம் வருகிறதே – இது பார்ப்பனியச் சிந்தனைதானே – இதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்கவில்லைபோலும்.
View More பாரதி: மரபும் திரிபும் – 5உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..
..இவர்கள் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமாம், அப்படிப் படித்தால் பார்ப்பனக் கூட்டம் அஞ்சி நடுங்க வேண்டுமாம். சொல்பவர்கள் சாதாரண மூன்றாம் தரப் பேர்வழிகள் அல்ல. பெரிய பதவிகளில் உட்கார்ந்திருந்தவர்கள். ..சுய நலத்தின் காரணமாக மக்களைப் பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்து அந்தத் தீயில் குளிர் காயும் அற்பத் தனம். இதை சொல்பவர்களில், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருப்பதுதான் வேதனை…
View More உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்
ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை. வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை! சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை!
View More ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?
ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! …. இந்தப் பகுத்தறிவுவாதிக்கு ராமரும் விநாயகரும் நம்பகத்தன்மை இல்லாத கட்டுக் கதைகளில் வரும் கற்பனைப் பாத்திரங்கள். ராமர் பாலமும் கற்பனை. ராமாயணமும் கற்பனை தான். ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான சாபம் மட்டும் கற்பனையல்ல, உண்மையென நம்பத்தகுந்தது! மூடநம்பிக்கையை முறியடிக்க முன்வாயிலில் நுழைவாரா முதல்வர்?
View More ‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்
தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?… பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)
View More செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்