நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீது முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம்… மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார்… தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள்…

View More நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

விலக்கப்பட்ட மலர் [சிறுகதை]

ஒருமுறை தெரியாமல் மரிய புஷ்பம் குழுக் கூட்டம் முடிந்து டீ குடிக்கும் போது கேட்டுவிட்டாள்: ‘நாம பிடிக்கிற மீனுலதான் பங்கு வாங்குகாவ, அந்த பங்கெல்லாம் சேத்து வெளிய காலேஜெல்லாம் கட்டுக்காவ. ஆனா இந்த ஊருக்கு வெளிய நம்ம புள்ளைகளுக்கு படிக்க வழிய காணும். நாம எதுக்காக்கும் அப்ப?

View More விலக்கப்பட்ட மலர் [சிறுகதை]

இனி நாம் செய்ய வேண்டுவது…

இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? [..] பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்? [..]

View More இனி நாம் செய்ய வேண்டுவது…

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!

View More குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்… ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

View More ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

பாரதியின் சாக்தம் – 4

மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்… பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்… காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.

View More பாரதியின் சாக்தம் – 4

பாரதியின் சாக்தம் – 3

சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?… மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்… சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு…

View More பாரதியின் சாக்தம் – 3

பாரதியின் சாக்தம் – 2

வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்… ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்…

View More பாரதியின் சாக்தம் – 2

பாரதியின் சாக்தம் – 1

பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.

View More பாரதியின் சாக்தம் – 1

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]

ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்… தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்… ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது?

View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]