வெளவால் போன்ற ஒரு உயிரிடமிருந்து நோய்க்கிருமி பரவ்வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 10 உருமாற்றங்கள் அடைந்த பின்னரே மனிதரைத் தாக்கும் வலிமையைப் பெற முடியும். இவையெல்லாம் நடந்திருந்தால் அதற்கான விஞ்ஞான, மருத்துவ சான்றுகள் கிடைத்திருக்கும். ஆனால் அதன் தடயமே இல்லை. ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கும் வெளவால் வைரஸ்தான் இப்படி நேரடியாக மனிதர்களைத் தாக்கும் பலம் பெறமுடியும்… இந்தத் திட்டமானது சீன விஞ்ஞானிகள் சிலரால் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் சொன்ன சில விஞ்ஞானிகள் மர்ம முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இப்போது நடப்பது மூன்றாம் உலகப் போர். உண்மையான எதிரியை விட்டுவிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களும் தமக்குள்ளாகவே கட்சி பிரிந்து அடித்துக்கொண்டு மடியப்போகிறார்கள்….
View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1Tag: மருத்துவம்
புதிய பொற்காலத்தை நோக்கி – 16
உலக நாடுகள் தாம் தயாரிக்கும் மருந்துகளுக்கு கொள்ளை விலை வைக்கிறார்கள். ஜன் ஆயுஷில் அதே மருந்தை நாலில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் தயாரித்து வழங்குகிறார்கள். இது அற்புதமான இந்திய அணுகுமுறை… இந்த நடமாடும் இருதய பரிசோதனைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதனால்தான் இந்த சிகிச்சை சாத்தியமானது. இந்தக் கருவியின் விலையானது பெரு நகர மருத்துவமனையில் இருக்கும் பரிசோதனைக் கருவியின் விலையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை… பாரதம் இதை தனது ஆன்மிகக் கடமையாக முன்னெடுத்துச் செய்யவேண்டும். மிகக் குறைந்த விலைக்கு நாகரிக மாமிசத்தை உற்பத்தி செய்து உயிர்களையெல்லாம் கொடூரத்தில் இருந்து காப்பாற்றவேண்டும்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 16கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்
ஒருவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐ.சி.யு.வில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருப்பது, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்கள், அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையை அளித்துக் கொண்டிருந்தது….அந்த அசரீரியான குரலில் திரு வெங்கட்ராமனின் கனவில் அந்த அறிவுரை ஒலித்தது. ஒரு ஆசிரியர் மாணவனுக்கு கட்டளையாக எடுத்துச்சொல்வது போல தமிழில் தெள்ளத்தெளிவாக அந்த அறிவுரை ஒலித்தது… தனக்கு டாக்டர் சார் குடும்பத்தோடு அதிக நெருக்கம் கிடையாது. இதனை எப்படி சொல்வது? சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா?… ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியின் ஆசியினால் வறுமையில் வாடும் 11 எழை நோயாளிகளுக்கு சங்கர நேத்ராலயாயில் ஒவ்வொரு வருடமும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கிடைத்து வருகிறது….
View More கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்அறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்
இந்தியாவில் அதிக அளவில் மக்கள் கொல்லப் படுவது சாலை விபத்துகளில் தான். பெரும்பாலும் விபத்து நடக்கும் இடங்களில் இருந்து அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் செல்ல நேரம் ஆகும் காரணத்தினாலேயே பெரும்பான்மையான விபத்துக்குள்ளான மக்கள் கொல்லப் படுகிறார்கள். இறக்க நேருகிறது. ஏன் சாலை விபத்துகளில் அடிபடுபவர்கள் உடனடியாக வான் வழியாக மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லும் வசதி அறிமுகப் படுத்தப் படவில்லை?… ஒரு அரசியல்வாதியின் தேர்தல் பிரசாரத்திற்காக ஊர் ஊருக்கு ஹெலிப்பாடுகள் அமைக்க முடிந்த அரசாங்கத்தினால் ஏன் மாவட்டத் தலைநகர்களில் இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம் ஒரு ஹெலிக்காப்டரையும் ஹெலிப்பாடையும் நிறுவ முடியவில்லை?…
View More அறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்
1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்…. கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்… மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்களையும் விட, சம்பு நாத் டேயின் பங்களிப்பு மிக அதிகமானது, உயர்வானது…
View More காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9
சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை. மன அமைதியினால் மட்டுமே பெறக்கூடியது. இது அடிப்படையிலேயே மற்ற நாகரீகங்களிடமிருந்து வித்தியாசப்படும். சந்தோஷம் என்பதை புலன் வழியான சந்தோஷமாகவே பார்க்க பழகின மேற்கத்திய சமூகங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கூறிய சந்தோஷம், Contentment (சம்ஸ்கிருதத்தில் சமாதானம்) என்பதை சுட்டும். இந்த மன நிலையை அடைய பணம் அவசியமே இல்லை. மேற்கூறியவையெல்லாம் எனக்குப் புரிந்தவரை அற்புதமான உளவியல் சாதனங்கள். பச்சையாக கூறினால், ஏழைகளை கட்டுக்குள் வைத்திருக்க உபயோகப்பட்ட உளவியல் சாதனங்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். பொதுவுடைமையை முழுமையாக சமூகத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உடைய ஒரு சமூகத்தை நிர்வகிக்க சட்டங்கள் மட்டும் போதாது என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். மேலே கூறப்பட்ட பல உளவியல் சாதனங்களை பயன்படுத்தி ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8
பொதுநலனைக் கொண்ட சமூகம் இயற்கையிலேயே உறுதி அற்றது. சுயநல உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பு அதில் உள்ளது…. தன் தேவைக்கேற்ற பூக்களை தானாகவே உற்பத்தி செய்து கொண்டிருந்த மரங்கள், இன்று இலைகள் இல்லாத கிளைகளைக் கொண்டதால், பூமழை பெய்யுமா என்று வானை நோக்கி பிச்சை கேட்கின்றன… “நான் அப்படி ஆசைப்பட வில்லை. நான் எதிர்பார்க்கும் இந்தியாவில், இளவரசர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இடங்கள் இருக்கவே செய்கின்றன” என்றார் காந்திஜி… ஏழைகளுக்கு உதவாமல் போனாலும் கூட, அறிவியல் ஆராய்ச்சியில் பின் தங்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூற நம்மில் தலைவர்கள் இல்லை….
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3
கம்யூனிஸத்தை எதிர்க்கும் இந்தியாவின் ஒரு வலது சாரிக் காரரையும், அமேரிக்காவின் ஒரு இடது சாரிக் காரரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே நகைச்சுவையை வைத்துதான் அரசியல் விமர்சனத்தை முன்வைப்பவர்கள்…. பெரு நோய்கள் ஏற்படுகையில், ஏழைகளால் தனியார் மருத்துவத்தின் செலவுகளை ஏற்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. தற்பொழுதைய நிலையில் அவர்கள் அந்த நோய்களுடனேயே வாழ்ந்து மடிகிறார்கள்… அரசு வருவாயில், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியமே 24 சதவிகிதமாக மாறியுள்ளது…
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்
சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம், கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்றார் உலகப் புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் சி.கே பிரகலாத்… பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; மாறாக அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.
View More பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்
நமது ஒவ்வொரு வேளை உணவிலும் இப்படிப்பட்ட தயார் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது என்பது சிரமமாகவே ஆகிவருகிறது. இப்படி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இப்படிப்பட்ட உணவு வகைகளில் சில பயங்கரமானவை, அதி ஆபத்தானவை… ஓலெஸ்ட்ரா – செரிக்கமுடியாத செயற்கை கொழுப்பு.
இது பல உணவுச்சத்துக்களை நம்மால் செரிக்க முடியாமல் ஆக்குகிறது; வயிற்றுக்குழாய் வியாதிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, ரத்தம் போகுதல் ஆகியவற்றை கொடுப்பதாக அறியப்படுகிறது…