கண்ணதாசனின் பாடலுக்கு வருவோம். அவர் எப்படி ஆரம்பிக்கிறார்? “உலகம் பிறந்தது எனக்காக” என்றுதானே. சாதாரணமாக ‘நான் பிறந்தேன்’, ‘அவர் பிறந்தார்’ என்போம். ஆனால் இங்கோ உலகம் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது உலகம் வரும் முன்பே ‘நான்’ இருந்திருக்கிறேன். அது உதித்து இருப்பது எனக்காக. இப்படியாக ‘நான்’ இல்லையென்றால் உலகம் இல்லை என்றாகிறது. அது உண்மைதானே?… சிறிதானாலும் தன்னால் ஒளியை உருவாக்கலாம், ஆனால் இருளை உருவாக்க முடியாது – ஒளியை மறைத்தே இருளை உருவாக்க முடியும் என்று தெளிகிறான். அதனால், உலகில் சூரியனால் இயற்கையாக நடக்கும் ஒளி-இருளைக் கொண்டு, சூரியனை அறிவாகவும் அது இல்லாது இருப்பதை அறியாமை என்றும் கொள்கிறான்….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2Tag: வேதங்கள்
மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்
மித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்… “சத்தியத்தின் ஒளியினாலும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும் அமரரையும் மனிதரையும் தத்தம் தொழில்களில் புகுத்தி பொன்மயமான தேரில் சுற்றி வருகிறான் ஸவித்ரு தேவன். உலகங்களையெல்லாம் நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறான்”… ‘இமம் மே வருண’ என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது…
View More மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்
ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா? தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா?” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்….
View More ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)
வேத நெறிப்படி வாழ நாம் எடுக்கும் சங்கல்பம் அல்லது உறுதியே யக்ஞோபவீத தாரணம் அல்லது பூணூல் அணிதல். உபநயனம் என்ற கல்விக் கண் திறக்கும் சடங்கின் புற அடையாளமாக பூணூல் அணியப் படுகிறது… அதன்படி வருகின்ற ஆவணி மாதம் 4ஆம் நாள் (20/08/2013) செவ்வாய் கிழமை ஆவணி அவிட்டம் நாளில் காலை 9 மணிக்கு யஜுர் வேத உபாகர்மம் நடைபெறும். அது சமயம் புதிதாக பூணூல் அணிய விருப்பம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு யக்ஞோபவீத தாரணம் செய்து கொள்ளலாம். இடம்: சென்னை திருவல்லிக்கேணி ஆரிய சமாஜம் … தகுதி: மனிதராக பிறந்த அனைவரும். தக்ஷிணை : வேதங்கள் காட்டும் வழியில் வாழ்வதே… மேலும் விவரங்கள் கீழே..
View More ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1
நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.
View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்
கடல் போன்ற உபநிடதங்களைக் கடைந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீதையின் சாரமாக, நமக்காக பகவான் ரமணர் தந்த, சுருக்கமான பொருட்செறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய தொடர்!
View More ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்
இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.
சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
View More சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1
சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது. (எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி)
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ…
View More வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”
View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்