கண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் [..] இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது [..] அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை [..] முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்பதும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா, சிமி , இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளால் எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.
View More அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்Tag: மத்திய அரசு
கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2
அணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல… இந்தியா எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு உள்ள நாடாக, பலமான ஒரு நாடாக மாறுவதை கிறிஸ்துவ அமைப்புகளும் அவற்றை இயக்கும் நாடுகளும் விரும்புவதேயில்லை… எஸ்.பி.உதயகுமார் ஆராய்ச்சியின்படி பொக்ரானில் அணு குண்டு வெடித்த பா ஜ க அரசு ஒரு நாசகார சக்தி. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே அமைதி ஆராய்ச்சியாளர் கூடங்குளத்தில் இறங்கி… இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால் ஜெயிக்கப் போவது இந்திய எதிர்ப்புச் சக்திகள் மட்டுமே, அது ஒரு மாபெரும் பொதுத் தொடர்புப் பிரச்சாரத் தோல்வியாகவும் இருக்கும்….
View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1
அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் வரை… மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அரசுகளின் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம்….சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா?…
View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…
இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும் […]
View More தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
திறமையான மாணவர்களை மனப்பாட அடிப்படையிலான முதற்கட்டம் நீக்கிவிடுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான CBSE பள்ளிகள் முதற்கட்டத்தைத் தாண்ட இயலவில்லை… பொதுவாக மாணவர்களைச் சலுகைகளை எதிர்நோக்கும் சவலைக் குழந்தைகளாக்கி, ஆசிரியர்களை அரசியல்வாதிகளின் கூட்டணிக் கட்சிகளாக்கும் தி.மு.க-வின் தந்திரத்தினால்…
View More தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2
சராசரி மக்கள் தொகை வளர்ச்சியை விடவும் அதிகமாக,1991 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏன் இவ்வளவு பயங்கரமாக அதிகரித்துள்ளது?… வரும் ஆண்டுகளில் 30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் தாக்கம் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்திற்கான வாசல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டே வரப் போகிறது.இது ஏதோ கற்பனையான ஊகம் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் கோட்பாடு சார்ந்த ஆய்வினால் உறுதிப்படுத்தப் பட்டு, சரியான தவல்களின் அடிப்படையில் கூறப்படும் அறிவுபூர்வமான விளக்கம்…
View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1
கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது… வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்…
View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார் அ.ராசா… இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது… மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.
View More ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி
சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்… முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது… இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது…(மூலம்: ஜான் மெக்லிதான்)
View More ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணிமக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…
பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த தேவே கவுடாவின் கட்சியும் காங்கிரசும் திரைமறைவில் நடத்திய சதிகளைக் கைவிட்டுவிட்டு, நேரடியாகவே களமிறங்கி நடத்திய கூத்துக்கள் [..] மீனுக்கு காத்திருந்த கொக்கு போல, உடனடியாக கர்நாடகா அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பிய கவர்னர் [..]
View More மக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…