சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.

View More சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்

மைக்கேல் விட்செல், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியர் இன்று மாலை சென்னையில் பேசுகிறார். எமது வ்ரலாற்று ஆர்வலர் குழு தொகுத்திருக்கும் இந்தக் கேள்விகளை இந்தத் தருணத்தில் அவரிடம் எழுப்ப விரும்புகிறோம், பேராசிரியர் கண்டிப்பாக அவற்றுக்கு விடையளிப்பார் என்ற நம்பிக்கையுடன்.

View More சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்…

View More மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு

நாதஸ்வர இசையுடன் தான் தென்னிந்தியாவின் எந்தவொரு மங்கலமான மகிழ்ச்சிகரமான விசேஷங்களும் துவங்குகின்றன. தென்னிந்தியக் கோவில்களுடனும், தென்னிந்தியக் கலாச்சாரத்திலும் நாதஸ்வரமும் தவிலும் போல வேறு எந்த இசைக் கருவியும் இரண்டறக் கலந்ததில்லை. ஆண்டவனைத் துயில் எழுப்புவதில் இருந்து இரவு கோவில் நடை சாத்தும் வரை அனைத்து முக்கிய சடங்குகளும் நாதஸ்வர இசை இன்றி அமைவதில்லை.

View More சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு

குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!

கௌஸர் பானு என்கிற கர்ப்பிணிப் பெண்ணை ஹிந்துக்கள் பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும், அவர் வயிற்றை வாளினால் கிழித்து உள்ளிருந்த பாதி வளர்ந்த கருவை வெளியே எடுத்துக் கொன்றதாகவும் ஒரு சம்பவத்தை டீஸ்டா செடல்வாட்டும், பல போலி மதச்சார்பின்மை வாதிகளும் ரத்தக் கண்ணீர் விட்டுப் பிரச்சாரம் செய்தனர். அகமதாபாத் அருகில் உள்ள நரோடா பாடியா என்ற இடத்தில் பல முஸ்லீம்களைக் கொன்ற ஹிந்துக்கள் அவர்களின் உடல்களை ஒரு கிணற்றில் போட்டு மூடியதாக ஒரு சம்பவம் ஜோடித்துச் சொல்லப்பட்டது. தற்போது அனைத்துச் சாட்சியங்களும் பொய், அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெரியவந்துள்ளது.

View More குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!

வருண் வருகையும் சோனியா கலக்கமும்

தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?

View More வருண் வருகையும் சோனியா கலக்கமும்

இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்

சென்னையில் GFCH என்கிற தன்னார்வ அமைப்பு, பிப்ரவரி 6,7,8 ஆகிய நாட்களில், 40 இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் ஒரு சம்மேளனம் மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. மாதா அம்ருதானந்தமயி மடம், வாழும் கலை அமைப்பு, ஈஷா அறக்கட்டளை, விவேகானந்த கேந்திரம், சேவா பாரதி, வனவாசிகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கு கொள்கின்றன. அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் உள்ளே காணலாம்.

View More இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்

ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்

இலங்கைவாழ் தமிழனின் கதை மிகத் துயரமானது. நெடுங்காலமாக நடந்து வருவது. கண்ணீர்த்துளி வடிவிலிருக்கும் இலங்கை அங்குள்ள தமிழர்களின் குருதித் துளியாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆம், அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது இனப்படுகொலை!

View More ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு

தமிழ்ச் சமயம் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்துவதும், தற்போது தீவிரமாகப் பரப்பப் பட்டு வரும் திரிபுகள் பற்றி எடுத்துரைப்பதும் மிக முக்கியமானது; இதுவே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்… புனித தாமஸ் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன…

View More உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு

உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்

மூவர் முதலிகள் முற்றம் சார்பில் ஜனவரி-24 (சனிக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம் கும்பகோணம் நகரில் நடைபெறுகிறது. சைவ ஆதீனகர்த்தர்கள், வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் முதலிய பிரபல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்…

View More உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்