ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே என்ற சகோதர இணையதளம் கடந்த ஒரு மாதமாக இயங்கி வருகிறது..…

View More ஹிந்துத்துவம் டுடே

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20

முந்தைய பகுதிகள் தொடர்ச்சி..  சென்ற கட்டுரையில் உத்திர பிரதேசத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள்…

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)

இராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ஆக அயோத்தி போகவேண்டும் என்பது இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. அப்படிப் போய் இறைவனை அடைவதற்கு, வானரர்கள் இராமரைத் தவிர வேறு யாரிடம் போய் வேண்டுவது? இறைவனுக்கு நாம் வேண்டிக்கொள்வதில், “இறைவா! நாங்கள் உன்னை அடைவதற்கு வழி காட்டு” என்பதைத் தவிர வேறு எந்த கோரிக்கை அதை விடச் சிறந்ததாக இருக்கிறது?… வால்மீகி ஒவ்வொரு இன்னல்களிலும் மனிதனான இராமர் எப்படி தன் நிலைப்பாடை எடுக்கிறார் என்பதைக் காட்டும்போது, அந்தக் காலத்தைய அவல நிலைச் சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படியும் ஒருவனால் இருக்க முடியும் என்று காட்டுவதே இந்த இலக்கியத்தின் இலக்கு. அதைக் கேட்டு ரசித்து, அது சொல்லும் வழியில் நடக்க நமக்கு அந்த இராமரே வழி காட்டட்டும்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)

விதியே விதியே… [நாடகம்] – 2

ஆயா கதை சொல்லு ஆயா – குழந்தைகள் நச்சரிக்கின்றன. ஆயா : ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். தில்ஷன் (பக்கத்தில் இருக்கும் இன்னொரு குழந்தையிடம்): ரெண்டு ராஜா இருந்தா நாடு தாங்காது…. மதி: எதிரியோட பலம், வியூகம் தெரியாம சண்டை போடற எப்பவுமே முட்டாள்தனம்தான் இல்லையா? ஆயா : ஆனா, இந்த இடத்துல அபிமன்யு எதிரியோட பலம் தெரியாம மோதலை. ஒத்தைக்கு ஒத்தையா நின்னு போராட வேண்டிய இடத்துல ஒருத்தரை அதுவும் சின்னஞ்சிறு பாலகனை ஒரே நேரத்துல பலர் அநியாயமா சுத்தி வளைச்சுக் கொன்னுட்டாங்க. அபிமன்யுவை ஜெயிச்சது வீரத்தினால இல்லை, வஞ்சத்துனால. மகாபாரதத்துல ஒரே ஒரு அபிமன்யு. ஈழத்துல எல்லாருமே அபிமன்யு. வெளியேறும் வழி தெரியாமல் பத்ம வியூகத்தில் மாட்டிக்கொண்ட தேசம் அது…..

மரண தேவன் : தப்பு செய்தவருக்கு தண்டனை என்றால் அதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.
பரம்பொருள் : என்ன நீ… புரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறாய். நல்லது செய்பவர்களுக்கு நன்மை… கெட்டது செய்பவர்களுக்கு தண்டனை என்பதா நம் தர்மம். அது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை, வாழத் தகுந்ததாக ஆக்கிக் கொள்ள, தாங்களாக உருவாக்கிய ஒரு கற்பனை….தாக்குப் பிடிக்க முடிந்தவற்றுக்குத் தான் இந்தத் தரணி. நம் தர்மம் அதுவே. இதில் உணர்ச்சிகளுக்கு ஏது இடம்….

மனிதர்களுக்கான தெய்வம், குழந்தைகளைச் சந்திக்கக் கிளம்புகிறது. நெற்றி நிறைய திருநீறை எடுத்துப் பூசிக் கொள்கிறது. கைகளில் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்கிறது. தலையில் தொப்பி ஒன்றை அணிந்து கொள்கிறது. சிலுவைக் குறியிட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்கிறது. புத்தனின் பாதக் குறடுகளை அணிந்து கொள்கிறது…

View More விதியே விதியே… [நாடகம்] – 2

நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்

நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மத்திய…

View More நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்

விதியே விதியே… [நாடகம்] – 1

நொண்டியடித்து வந்த யாழினி கண்ணைத் திறந்து பார்க்கிறாள்… சில்லில் அவள் காலை ஊன்றும் நேரம் பார்த்து எங்கிருந்தோ வந்த ஷெல், மிகச் சரியாக சில்லின் மேல் விழுந்து வெடித்துச் சிதறுகிறது. யாழினி தூக்கி எறியப்படுகிறாள். தனியாக தெறித்து விழுந்த கால் விலுக் விலுக் என்று துடிக்கிறது. அந்த ஒற்றைக் காலில் இருந்த கொலுசும் ‘ஜல் ஜல்’ எனத் துடித்து அடங்குகிறது….. என் சட்டைல இருந்த வண்ணத்துபூச்சிங்களோட எல்லா நிறமும் அழிஞ்சிபோய் ஒரே சிவப்பு நிறமா ஆகிப் போச்சு. அப்படியே செத்துப் போய் இங்க வந்துட்டேன் என்று சொல்லி அந்த பாப்பா சிரிக்கிறது. அந்த வீட்டுப் பெண் உள்ளே போய் ஒரு குவளையில் நீர் கொண்டு வருகிறார். வந்து பார்க்கையில் நீர் கேட்ட குழந்தையைக் காணவில்லை…. அம்மா, விட்டு வந்த உறவுகள் பற்றியும் நட்டு வைத்த மரங்கள் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். மடியில் விளையாடிக் கொண்டிருந்த என் கண்ணில், கழுத்தில் கட்டியிருந்த சயனைட் குப்பி பட்டது. பற்கள் துறுதுறுத்தன. எம்பி எம்பிப் பிடிக்க முயன்றேன். முடியவில்லை. அமைதியான தேசத்தில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சராசரியாக 60-70 வருட இடைவெளி இருக்கும். நான் அந்த இடைவெளியை ஒரே நொடியில் கடந்தேன்….

View More விதியே விதியே… [நாடகம்] – 1

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

அயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் – “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்….க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் – ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம். அது என் வேர். என் மூலாதாரம். என் தொன்மை…”. ஸ்ரீ நஸ்கி அவர்களது தாகத்துடன் ஒப்பிடுகையில் எனது தேடலில் இருக்கும் ஆவல் மிகவும் மாற்றுக் குறைவானதே. நான் ஸ்தலத்தின் வெகு அருகில் சென்றிருந்தாலும் தேசப்பிரிவினையால் இடப்பட்ட வெம்மை மிகுந்த தடைக்கோட்டால் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பது நிதர்சனம்…

View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1

வழிபாட்டு ரீதியாக அன்னிய மதத்தைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக ஹிந்துஸ்தானத்தை தாய்நாடாகக் கொண்ட பற்பல இஸ்லாமியச் சஹோதரர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்றுவதைக் கண்டிருக்கிறேன். அவ்வாறு போற்றும் அன்பர்களை நினைவு கூர்வதன் மூலம் ஹிந்துத்வம்வெறும் கருத்தாக்கம் அல்லது கற்பனை அல்ல மாறாக நடைமுறை சாத்யம் என்பதை சித்தப்படுத்த இயலும்… ஆங்காங்கு முந்தைய இரவில் விழுந்த பனித்துளிகள். கோபாத்ரி பர்வதம் என்ற ஒரு சிறு குன்றின் மீது ஆலயம். காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வருகை தந்தமை பதியப்பட்டிருந்தது. அப்படியானால் அந்த ஸர்வக்ஞ பீட ஸ்தலம் எங்கிருக்க வேண்டும்?…. ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி என்ற இஸ்லாமியப்பெருந்தகை சாரதா பீடத்திற்குச் சென்று வர வேண்டும் எனத் தணியாத ஆசை கொண்டிருந்தார். அது நிறைவேறியது எப்படி எனபதை ஒரு அழகிய வ்யாசமாக எழுதியுள்ளார்…

View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ்.…

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

நீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்

உதகையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த இந்து முன்னணி மாவட்டச் செயலர் மஞ்சுநாத்தை 20 இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆட்டோவை மறித்து, நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக த.மு.மு.க அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப் பட்டனர்… குன்னூரில் இத்தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பற்றீய செய்திக்கான சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்த இந்து முன்னணி செயல்வீரர்களுடன் 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருந்த முஸ்லிம் கும்பல் மீண்டும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலால் இன்னொரு மாவட்டச் செயலர் ஹரிஹரன், வெங்கட்ராஜ், ஜெயகுமார் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். காவல்துறையினர் இருக்கும் போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது… கடந்த 2-3 ஆண்டுகளாகவே கோவை, திருப்பூர் பகுதிகளில் முஸ்லிம் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. 1990களில் கோவையில் இது போன்று தொடர்ந்து இந்து இயக்கத்தவர்கள் தாக்கப் பட்டனர், அதன் பின்பு 1998ல் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலால் நகரம் நிலைகுலைந்தது. தற்போது கோவையிலும், அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு நேர்மையாகவும், துணிவாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு…

View More நீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்