வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்… ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்…
View More பாரதியின் சாக்தம் – 2Tag: நம்பிக்கை
பாரதியின் சாக்தம் – 1
பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.
View More பாரதியின் சாக்தம் – 1ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து
இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா?… சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது….
View More ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்துமிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது
(மூலம்: நவோமி ப்ரெட்டிமேன்) நானும் எங்களது பணியில் முழுமுற்றாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்… மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக… நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் – அச்சம்.
View More மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியதுஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2
வீடு திரும்பும் வழியெல்லாம் மனதில் தோன்றி பின் நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளையே பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு புதிது… நடந்ததை நடந்தபடியாக ஒரு சாட்சியைப்போல் பார்த்துக் கொண்டிருப்பதில் தவறேதுமில்லை; தான் நினைத்ததை நடத்துவதுபோல் எண்ணுவதுதான் தவறு… இறைவனே இல்லை என்றவர்கள், ஒருவனே தேவன் என்கிறார்கள், ஏழையில் காண்போம் என்கிறார்கள். மற்றும் “ஓம் சூர்யாய நமஹ:” என்பதற்கு “ஞாயிறு போற்றுதும்” என்கிறார்கள் அல்லவா?
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை
அத்வைதத்தை அறிவியல் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் ஆஸ்த்மாவை அறிவியல் சரியாகவே கையாள்கிறது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது… அர்ஜுனன் நம்மைப்போன்ற நிலையில் ஒரு கேள்வியை கேட்கிறான் – ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடும் ஒருவன் நம்பிக்கை இருந்தும் நடுவில் வழி தவறினால் அதுகாறும் செய்தபயிற்சி வீண்தானா? என்று. இதற்கு பதில் அளிக்கும் பகவான் எவ்வளவு குறைந்திருந்தாலும் ஆன்மீகப்பயிற்சிகள் வீணாவதில்லை. தோல்வி அடையும் ஒருவன் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய பயிற்சியை தொடருவான் என்று கூறுகிறார்.
View More மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வைபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1
அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்… பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.
View More பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்
நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா?
View More தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்