ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் என்று தொடங்கும் இந்தப் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது… பின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள ‘அறிவே தெய்வம்’ என்ற தலைப்பே ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே…
Tag: பகுத்தறிவு
தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்
இதே மந்திரத்தைத்தான் பிராமணர்களும் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சூத்திரனை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது இந்த மந்திரம் கேவலமாக இருந்தால் பிராமணர்கள் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துவார்களா? சூத்திரனைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் சூத்திரனுக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார்கள். ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அதே மந்திரம்தான் பயன்படுத்தப்படுகிறது…காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லாத ஒன்றை காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்தானே! இப்படி திரிபுவாதம் செய்பவர்கள்தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள்….
View More தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?
மேம்போக்காக பார்க்க இந்திய அமெரிக்க சட்டங்களின் அறிமுக பிரகடனங்கள் (preamble) ஒன்று போல இருப்பது போல தோன்றும் . ஆனால் அதில் நுண்ணிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் சட்ட வல்லுநர், ஆர்.ஜி.சதுர்வேதி . அமெரிக்க பிரகடனம் ‘establish justice’ என சொல்கிறது. ஆனால் பாரதமோ ‘secure justice’ என சொல்கிறது. அமெரிக்க பிரகடனத்தில் நீதி என்பது சட்டம் எதை சொல்கிறதோ அதுதான். சட்டத்திலிருந்து நீதி முகிழ்கிறது – அது ஒரு emergent property. ஆனால் பாரதத்தில் அவ்வாறு அல்ல. நீதியை நோக்கி சட்டம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கு அது ஒரு primordial reality. சட்டம் அந்த நீதியை மக்கள் அனைவருக்கும் அளிக்கும் ஒரு கருவி…
View More நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?எழுமின் விழிமின் – 2
மலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளை எல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாடுகளின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது… இந்த இனத்தவரின் துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது.. கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும்…
View More எழுமின் விழிமின் – 2கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!
அமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்…பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்… மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு…
View More கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!ரமணரின் கீதாசாரம் – 6
ஒருவன் செய்ய வேண்டிய செய்கைகளையும், முறைகளையும் விதிகளாக வகுத்தும், அதேபோல செய்யக் கூடாதவைகளைத் தவிர்ப்பதையும் சொல்வது சாஸ்திரம். செய்யக் கூடியவைகளை தர்ம காரியங்கள் என்றும், தவிர்க்கப்பட வேண்டியவைகளை அதர்ம காரியங்கள் என்றும் பொதுவாகச் சொல்வார்கள். அவைகள் வேதத்தையே பிரமாணமாகக் கொண்டு பெரும்பாலும் செவி வழியே வந்தவை. காலத்தின் மாற்றங்களினால் எங்கு ஐயங்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் நம் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அல்லது எதைச் செய்தார்களோ அதைப் பின்பற்றி நடப்பதும் சாஸ்திரத்தை ஒட்டி நடப்பதாகவே கொள்ளப்படும்.
View More ரமணரின் கீதாசாரம் – 6போகியை யோகி எனல்
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
View More போகியை யோகி எனல்மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]
The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம்… மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது… அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.
View More மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?
ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! …. இந்தப் பகுத்தறிவுவாதிக்கு ராமரும் விநாயகரும் நம்பகத்தன்மை இல்லாத கட்டுக் கதைகளில் வரும் கற்பனைப் பாத்திரங்கள். ராமர் பாலமும் கற்பனை. ராமாயணமும் கற்பனை தான். ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான சாபம் மட்டும் கற்பனையல்ல, உண்மையென நம்பத்தகுந்தது! மூடநம்பிக்கையை முறியடிக்க முன்வாயிலில் நுழைவாரா முதல்வர்?
View More ‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்
கருணாநிதி கையால் தாலி எடுத்துக் கொடுப்பது, எதிர்கட்சியின் மீது பெய்யப் படும் வசைகளே மந்திரங்களாக வைத்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டப் படுவது போன்ற அவலம் எதுவும் நடக்காமல், தன் மனதுக்கு பிடித்தபடி, தன் குடும்பத்தினர் விரும்புகிற படி இந்த திருமணத்தை நடத்தியிருக்கிற ரஜினியின் நேர்மை மெச்சத் தகுந்தது…. விடுதலை பத்திரிகை பகுமானமாக வீரமணி ரஜினி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ மட்டும் இன்று வெளியிட்டிருக்கிறது…
View More ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்