பாரதியின் சாக்தம் – 4

மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்… பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்… காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.

View More பாரதியின் சாக்தம் – 4

அறியும் அறிவே அறிவு – 2

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே… உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும்.

View More அறியும் அறிவே அறிவு – 2

இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

இந்த ஆண்டு விநாயகரின் பிறப்பைப் பற்றியும் பிள்ளையார் வழிபாடு பற்றியும் திண்டுக்கல், கோவை போன்ற சில ஊர்களில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. […]மக்கள் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எல்லா ஊர்களிலும் சந்து பொந்துகளில் உள்ள சின்னஞ்சிறு பிள்ளையார் கோயில்களிலும்கூட மிக விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது.

View More இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்

இந்தப் புராணத்தில், ஆசிரியர் தக்க இடங்களில் அந்நிய மதத்தாரால் ஈழநாட்டில் இந்துமதத்திற்கு ஏற்பட்ட தொல்லைகளையும் பதிவு செய்து வைத்துள்ளார்… தாமன் என்பது ‘தாமசு’ என்பதன் மரூஉ. கனகசபாபதி குருக்கள், மறைவாக, ‘தாமன்’ என்ற அந்தப் பெயரையே ‘தாமோதரன்’ என மாற்றியமைத்து, தமது சைவசமய ஆசாரப்படி… அருணாசலம் மதமாற்றத்திற்குச் சிறிதும் மனங்கொள்ளாது, முந்தினநாள் இரவே பாடசாலை மதிலை ஏறிக் குதித்து…

View More ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்

தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்

வாசகர்கள் அனுப்பிய பல கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றிற்கான பதில்களை நீங்கள் tamizh.hindu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, இந்தப் பகுதியின் இறுதியில் உள்ள மறுமொழிப் பெட்டியிலும் உங்கள் பதில்களைத் தரலாம்.

பதில்கள் வந்து சேரக் கடைசி தேதி: 27 அக்டோபர் 2010

View More தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்

இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2

ஆப்பிரிக்க எண்ணெய் கிணறுகளின் பங்குகளை வாங்க இந்திய, சீன கம்பெனிகள் போட்டி போடுகின்றன. சீன அரசே தேவையான பணத்தை புரட்டி தருவதால் சீன கம்பெனிகளே போட்டியில் முதலிடம்… ராஜ தந்திரங்களும், தார்மீக நெறிமுறைகளும் ஒருசேர பின்பற்றப் படுவது சாத்தியமல்ல. இது யதார்த்தம்… வர்த்தகத்தின் இலாபத்தின் கணிசமான பகுதி ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை இந்தியா உறுதி படுத்த வேண்டும்…

View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2

அறியும் அறிவே அறிவு – 1

“IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?”… ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே… எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது?…

View More அறியும் அறிவே அறிவு – 1

நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!

அயோத்தியில் ஒரு நவாப் காலத்தில் நியாயம் ஹிந்துக்கள் பக்கம் இருந்ததால் அவர்களுக்குச் சாதகமான முடிவு உடனுக்குடன் எடுக்கப்பட்டது. ஆனால் அதே அயோத்தியில் 1947-க்குப் பிறகு சுதந்திர பாரதத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களோ, ஸ்ரீ ராம ஜன்மஸ்தானத்தில் இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ராமபிரான் கோயிலை இடித்துக் கட்டப்பட்ட பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு, அங்கு மீண்டும் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை!

View More நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!

பாரதியின் சாக்தம் – 3

சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?… மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்… சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு…

View More பாரதியின் சாக்தம் – 3

இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1

அமேரிக்கா பல வரலாற்று தவறுகளை செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கம்யூனிஸ்டுகள் அட்டூழியங்களை மட்டுமே செய்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும்… இந்தியாவின் இறையாண்மை, இந்தியர்களின் முன்னேற்றம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்குத்தான் நாம் ஒரு அரசை பதவியில் அமர்த்துகிறோமே தவிர, மற்ற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவும் நம் நாட்டின் தேவைகளை மறப்பதற்காகவும் அல்ல….

View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1