பொற்சிலம்பு வயிற்றில் அணிந்த பாம்புக்கச்சையோடு அழகாக மிளிர, வெற்றிதரும் நடனத்தைச் செய்யும் தந்தையே வியந்து பார்த்து துடி கொட்டி இசைக்க, நின்று ஆடுகின்ற ஆனைக்கன்றை நினைப்பவர்களது வினைகள் இல்லாமலாகும் என்கிறது இப்பாடல்.. ஸ்ரீ சங்கரர் இயற்றிய கணேச புஜங்கம் – இதில் முதலில் நர்த்தன கணபதியின் ஸ்வரூபமும், பின்பு யோகிகளின் தியானத்தில் வெளிப்படும் கணபதியின் சச்சிதானந்த ஸ்வரூபமும், இறுதியில் பரம்பொருளாகிய கணேச தத்துவமும் அழகுற வர்ணிக்கப் படுகின்றன. இசைஞானி இளைராஜா மிக அழகாக துல்லியமான சம்ஸ்கிருத உச்சரிப்புடன் இந்தத் துதியை இசையமைத்துப் பாடியுள்ளார்….
View More நர்த்தன கணபதிTag: விநாயகர்
ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்
விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது… உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில் வளர்ப்பது அவசியம்….
View More ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்விநாயகர் நினைவுகள்
கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன. நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட பல கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது… பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்… பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும். இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்….
View More விநாயகர் நினைவுகள்வாழும் பிள்ளை
”நான் நாத்திகன். ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன்,”… திருவள்ளுவரும் அம்பேத்கரும் விவேகானந்தரும் வீரசிவாஜியும் இணைந்திருக்கும் பேனர் முதல் பிரபாகரன் டி ஷர்ட் போட்டு காவிக் கொடி பிடிக்கும் தமிழீழ ஆதரவு இளைஞர்வரை… அப்போதுதான் திலகரும், பாரதியும் கண்ட விநாயக தரிசனம் சமூக வெளிப்பாடாக மலரும்.
View More வாழும் பிள்ளைகணபதி பப்பா மோரியா ! அடுத்த வருசமும் வாரீயா ?
கொண்டாடத்தான் வாழ்க்கை ! கொண்டாடச் சொல்லுகிறான் தும்பிக்கை !
View More கணபதி பப்பா மோரியா ! அடுத்த வருசமும் வாரீயா ?விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்
விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது… விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.
View More விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை
சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் [..] எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..[..]
View More பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வைதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்… துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது…
View More தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்எல்லாப் புகழும் விநாயகனுக்கே!
கோவையில் விநாயகர் சிலைகளை ஏற்கனவே வைத்து வழிபட்ட இடங்களிலும் கூட அனுமதி மறுத்தது காவல்துறை. பல இடங்களில் முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது… முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.. குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் அவர்களின் பிரத்யேக பேட்டி, மற்றும் கண்கவர் விநாயகர் ஊர்வல புகைப்படங்கள்…
View More எல்லாப் புகழும் விநாயகனுக்கே!ஒரு பயணம் சில கோயில்கள்
வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்… சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்…
View More ஒரு பயணம் சில கோயில்கள்