மதத்தை மாற்றிக்கொள்ளும் ஒருவர் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரை எதிரியாகவே நடத்த வேண்டுமா? அவர் இந்து மதத்துக்கு இந்து கலாசாரத்துக்கு திரும்பியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடத்தவேண்டுமா?.. நம் நாட்டில் இருந்தே நம் தேசியத்துக்கு தர்மத்துக்கு கலாசாரத்துக்கு எதிராகப் பேசுபவர்களை உருவாக்கும் எதிரியின் சாமர்த்தியத்தில் ஆயிரத்தில் ஒருபங்கையாவது அயல் நாட்டினரில் நம் கலாசாரத்தை மதிக்கும் நபர்களை முன்னிலைப்படுத்துவதில் காட்டியிருக்கிறோமா?…
View More பாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்Tag: தேசியம்
அம்பேத்கரும் தேசியமும்
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது…
View More அம்பேத்கரும் தேசியமும்நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?
மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம். திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம்
View More நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?எழுமின் விழிமின் – 27
ஏதோ சில மதங்களுக்கு நான் விரோதி என்பது உண்மையல்ல. பாரதத்திலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு நான் எதிரி என்பதும் பொய் தான். ஆனால், அமெரிக்காவில் அவர்கள் பணம் திரட்டுவதற்காகக் கையாளும் முறைகளை நான் எதிர்த்து ஆட்சேபிக்கிறேன். ஹிந்துத் தாயானவள் தனது குழந்தைகளை கங்கையில் எறிவதாக ஒரு படம் சித்தரிக்கப்பட்டு, குழந்தைகளின் பள்ளிப் பாடப் புத்தகத்திலே வெளியாகி உள்ளது. இதன் அர்த்தம் என்ன?…. அரேபிய நாட்டு தேவதூதர் நிறுவிய மதத்தைப் போல, இந்தக் கொள்கைகளை தீவிரமாக இறுகக் கடைப்பிடித்து வருகிற மதம் உலகில் வேறெதுவும் இல்லை. இவ்வளவு ஏராளமாக ரத்தத்தைச் சிந்தி பிறரைக் கொடூரமாக நடத்திய மதம் வேறெதுவும் இல்லை….
View More எழுமின் விழிமின் – 27எழுமின் விழிமின் – 7
“…எது எளிது? ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வளர்ந்து உருப்பெற்ற நமது தேசீய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? அல்லது சில நூற்றாண்டுகளாக நீங்கள் ஒட்டவைக்கப் பார்க்கிற அந்நிய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? ஆங்கிலேயர்கள் தமது யுத்தரீதியான பழக்க வழக்கங்களை மறந்து, போரிடுவதையும் ரத்தம் சிந்துவதையும் கைவிட்டு விட்டு, சாந்தமாக, அமைதியாக உட்கார்ந்து சமயத்தையே தமது வாழ்வின் ஒரே குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுவதில் தமது சக்தி முழுவதையும் ஏன் ஒருமுகப்படுத்தக்கூடாது?…”
View More எழுமின் விழிமின் – 7எழுமின் விழிமின் – 6
என்னுடைய முன்னோர்களைக் குறித்து வெட்கப் படாமல் இருக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் கொள்கைகளில் ஒன்று. உலகில் தோன்றிய பெருமை மிக்க மாந்தரில் நான் ஒருவன். ஆனால் வெளிப்படையாக உங்களுக்குக் கூறுகிறேன். நான் எனக்காகப் பெருமைப் படவில்லை. என் மூதாதையர்களின் காரணமாகவே பெருமை இன்னும் அதிகரிக்கிறது. அது எனக்கு வலிமையையும், வீர நம்பிக்கையையும் தருகிறது. பூமியில் புழுதியாகக் கிடந்த நிலையிலிருந்து அது என்னை மேலே உயர்த்தியுள்ளது. பெரியோர்களான நமது முன்னோர் களின் மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அது என்னை வேலை செய்ய வைத்துள்ளது.
View More எழுமின் விழிமின் – 6திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை
ஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார். [..]
View More திமுகவுக்கு பிடிக்காத வார்த்தைபாரதியின் சாக்தம் – 4
மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்… பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்… காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.
View More பாரதியின் சாக்தம் – 4ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்
ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும் … தன்னுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும், செயல்பாட்டிற்கும் தக்க அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை சென்று மோகன்ஜி சந்தித்தது, அவரின் நற்பண்பைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
View More ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்
சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்? எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின்
பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்! 1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள். தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.