நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.
View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1Tag: இராமாயணம்
எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்
தமிழர் பெருமிதம் கொள்ளும் சீனத் தொடர்பு, அராபிய வணிகத் தொடர்பு, கீழ்த்திசை நாடுகளின் தொடர்பு இவற்றுக்கும் முன்பாகவே ஒரு நீடித்த வடபுலத் தொடர்பிருந்ததை பாரதத்தின் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன…. அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்… பாகவதத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் தேவசி என்பவர்… பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் பல்சந்த மாலை இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை… இவர் தொகுத்த ’ப்ரதானப்பெட்ட மதிலகம் ரேககள்’ (Important Temple Records) அநந்தபுரம் ஆலயத்தில் தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணக் குவியலைப் பதிவு செய்துள்ளது… இலக்கிய ஈர்ப்பும் இறையுணர்வும் இனிய கவிதைகளும் பல்லினப் பாகுபாட்டைத் தகர்த்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதை உலக வரலாற்றில் நாம் தொடர்ந்து காண முடிகிறது.
View More எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்அவ்வரங்கள் இவ்வரங்கள்
இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.
View More அவ்வரங்கள் இவ்வரங்கள்பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3
பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய் [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை
இராமனின் முன்னால் சீதையும், பின்னால் இலக்குவனும் நடந்திடும் காட்சியிலும் பண்பினிமைச் சுட்டுண்டு… இராவணனை இராவணனாகவும் இராமனை இராமனாகவும் ஆக்கிய அற்புத உரைகல் சீதாதேவி… ஆண்டுதோறும் இராமாயண அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் நன்முயற்சி இது.
View More அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமைஅயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பயனுக்காக பயன்பட்ட கட்டடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும் வாயில் நிலைகளும், சிற்பங்களும் அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும் மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன… மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது…
View More அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமிஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…
View More ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண உரை
நடிகர் சிவகுமார் சமீபத்தில் சென்னையில் மக்கள் தொடர்பு அமைப்பின் சார்பில் நிகழ்த்திய கம்பராமாயண…
View More நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண உரைகம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.
View More கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்புகம்பனின் கும்பன் – 2
” அண்ணனே, இந்த உலகினைப் பேர்த்து எடுக்கலாம். அல்லது உலகைச் சுற்றி ஒரு வேலி போடவும் செய்யலாம். ஆனால், இராமனை வெல்வது என்பது எளிதா? “
View More கம்பனின் கும்பன் – 2