வெளிநாட்டவர்கள் புனித நகரமான ஹரித்வாருக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ரஷ்யர்கள்… யோகம், ஹாரி பாட்டர் கதைகள் ஆகியவை தீயவை, என்று கத்தோலிக்க சபையின் தலைமை பேயோட்டி தீர்ப்பு … கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்… மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து அங்குள்ள நிலவரம் பற்றியும் மனித உரிமை மீறல்கள் பற்றியும்… அனாதைகள் இல்லத்தில் குழந்தைகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அந்த இல்லத்தின் தலைவி பெண் பாதிரியார்…
View More இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)Tag: யோகம்
விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்
விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது… விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.
View More விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்போகியை யோகி எனல்
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
View More போகியை யோகி எனல்அறியும் அறிவே அறிவு – 10
அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 |…
View More அறியும் அறிவே அறிவு – 10பாரதியின் சாக்தம் – 2
வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்… ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்…
View More பாரதியின் சாக்தம் – 2பாரதியின் சாக்தம் – 1
பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.
View More பாரதியின் சாக்தம் – 1யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2
மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. … தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்…
View More யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1
மனதைத் தூய்மைப்படுத்தி, துக்கத்திலிருந்து விடுதலை அடைந்து, பேரின்பமான உங்கள் ஸ்வரூபத்தை நீங்கள் உணர விரும்பினால், யோகத்தை முழு மூச்சுடன் வாழ்க்கை முறையாக மாற்றுவது அவசியம். நீங்கள் கிறித்தவராகவோ, முஸ்லீமாகவோ இருந்தால், முதலில் அந்த மூட நம்பிக்கைகளில் இருந்து முழுவதும் விடுபட வேண்டும். வேண்டுமானால் பகுத்தறிவுவாதியாக இருந்து விஞ்ஞான ரீதியில் யோகத்தை அணுகலாம். … தனி நபர்களை கடவுளாகப் பாவித்து சாமான்ய மனிதர்களால் இயற்றப்படும் சொற்றொடர்களை மந்திரங்கள் என்று கொள்வது சாத்திர ரீதியில் பார்க்கையில் தவறு.
View More யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1அருணையின் கருணை
ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.
View More அருணையின் கருணைவாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?
உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?
View More வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?